உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார் - அவர் கடந்து வந்த பாதை என்ன? Twitter
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் : அமைச்சராகிறார் கலைஞர் கருணாநிதியின் பேரன் - அவர் கடந்து வந்த பாதை என்ன?

இனி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராகவும் அறியப்படுவார். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு அவர் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

Antony Ajay R

சினிமாவில் கலகத் தலைவனாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நிஜத்தில் கழகத்தலைவன் ஆகும் முனைப்பில் பல விஷயங்களைச் செய்து வருகிறார்.

அவரது முக்கிய இலக்கான அமைச்சர் பதவியை இன்று அடைகிறார். அவருக்காக தனி அறை தலைமைச் செயலகத்தில் தயாராகி வருகிறது. சட்டப்பேரவைக் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் உள்ள அறையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இனி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராகவும் அறியப்படுவார். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு அவர் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் டு கலகத்தலைவன் :

உதயநிதி ஸ்டாலின் முதன்முதலில் மக்களுக்கு சினிமா தயாரிப்பாளராக அறிமுகமானார்.

2008ம் ஆண்டு விஜய், த்ரிஷா நடித்த குருவி படம் தான் அவரது முதல் தயாரிப்பு.

அதன் பிறகு சூர்யா, கமல், சிம்பு என முன்னனி நடிகர்களின் திரைப்படங்களைத் தயாரித்தார்.

2010ம் ஆண்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம் படங்களை வெளியிடவும் தொடங்கியது.

சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் தான் அவர் முதன் முதலாக வெளியிட்ட திரைப்படம்.

இதற்கு இடையிலேயே 2009ம் ஆண்டு தயாரித்த ஆதவன் படத்தில் முதன் முதலாக திரையில் தோன்றினார் உதயநிதி. கே.எஸ் ரவிக்குமாருடன் கடைசிக் காட்சியில் மட்டும் வந்து செல்வார்.

2012ம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற நகைச்சுவைப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் உதயநிதி.

அதைத் தொடர்ந்து  கதிர்வேலன் காதல்,நண்பேன்டா, கெத்து,மனிதன்,கண்ணே கலைமானே,சைக்கோ,நெஞ்சுக்கு நீதி என 15 படங்களில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல்

சமீபத்திய நேர்காணல்களில் உதயநிதி ஸ்டாலின் இளைஞராக இருந்தது முதலே அரசியலில் ஈடுபட்டு வந்ததாகவும். கலைஞர் நிற்கும் தொகுதியில் வீடு வீடாக பிரச்சாரம் செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சில நாட்காள் முன்பு வரை மீடியாக்களில் அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் ஈடுபாடு காட்டிய போது உதயநிதி அரசியலில் இருந்து விலகியே நின்றார்.

மக்கள் ஏற்றுக்கொள்ளும் நாயகனாக உருவெடுத்த பின்னரே 2018ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பல தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்ற பிறகு 2019 ஜூலையில் இளைஞரணித் தலைவராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து திமுக மீது வாரிசு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

2021 தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது உதயநிதி மீது வாரிசு அரசியல் சர்ச்சை ஓங்கியது.

விமர்சனங்களைக் கடந்து சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகள் பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.

அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என சிலர் கூறினர். ஆனால் முதலமைச்சர் அப்போது மௌனம் காத்துவிட்டார்.

திமுக ஆட்சியில் அமைச்சர்கள் குறித்த ரிப்போர்ட்களை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த ரிப்போர்ட் அடிப்படையில் அமைச்சரவை மாற்றங்கள் இருக்கும் எனக் கூறினர். அப்படியாகவே இந்த விரிவாக்கமும் பார்க்கப்படுகிறது.

உதயநிதி அமைச்சராவதுடன் மூத்த அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உதயநிதி அமைச்சராவதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி ஆகியோர் தங்கள் மாவட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

விமர்சனங்கள் :

சினிமா - அரசியல்

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் 2022ம் ஆண்டு தமிழகத்தின் மிகப் பெரிய வெளியீட்டாளராக வளர்ந்திருக்கிறது.

2010 முதல் 2021 வரை 30 படங்கள் மட்டுமே வெளியிட்டுள்ள ரெட் ஜெயன்ட் நிறுவனம், 2022ல் 22 படங்களை வெளியிட்டுள்ளது.

முக்கியமாக பெரிய நாயகர்கள் நடிக்கும் படங்களை உதயநிதி வெளியிடுவதே விதி என்றாகிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் பதவியை ஏற்கும் பட்சத்தில் உதயநிதி மிகுந்த செல்வாக்கு உடையவராக உருவெடுப்பார். அப்போது திரைத்துறையையும் அவர் கையில் வைத்திருப்பது விமர்சனங்களை அதிகரிக்கும்.

அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவும் உதயநிதி ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு அரசியல்

மற்றொரு முக்கிய விமர்சனம் 'வாரிசு அரசியல்'. ஸ்டாலின் அமைச்சராகவும் துணை முதல்வராகவும் பொறுப்பேற்ற போது கலைஞர் மீது தீவிரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதேப் போல உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் மீது தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

சமீபத்தில் ஒரு மேடையில், "எங்களுக்கு வாரிசு இருக்கிறது அதனால் கம்பீரமாக சொல்கிறோம்" என ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி அமைச்சராக்கப்படும் விளையாட்டுத் துறையில் பல முக்கியத்திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்களை அமைக்குமென ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதனை வைத்து உதயநிதியின் செல்வாக்கை உயர்த்துவதே திமுகவின் திட்டமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஸ்டாலின் அரசியலில் முன்னிறுத்தப்பட்டபோதும் இதே காட்சிகள் தான் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?