தர்மபுரியில் இருக்கும் 'மினி ஊட்டி'- பட்ஜெட் Spot-க்கு Trip செல்ல ரெடியா?  Twitter
தமிழ்நாடு

தர்மபுரியில் இருக்கும் 'மினி ஊட்டி'- பட்ஜெட் Spot-க்கு Trip செல்ல ரெடியா?

இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியின் ஒரு அங்கமாக தான் இந்த வத்தல் மலை அமைந்துள்ளது.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது

Priyadharshini R

நாட்டில் பல இடங்களில் பருவமழை தொடங்கிவிட்டது. ஆனாலும் வெப்பம் குறைந்த பாடில்லை. இந்த போல மாறிமாறி இருக்கும் கிளைமேட்டுக்கு ஊர் சுற்றலாம் என்றால் நினைத்தவுடன் பணத்திற்கு என்ன செய்வது என்று முதலில் தோன்றும்.

குறைந்த விலையில் நமக்கு அருகிலேயே இருக்கும் அழகான சுற்றுலா தலத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தால்? சும்மாவா விடுவோம். ஊட்டி தெரியும் அது என்ன மினி ஊட்டி? அப்படி ஒரு இடத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இயற்கையே கிடைத்த ஒரு வரம் தான் வத்தல்மலை.

இதமான வானிலை, 24 கொண்டைஊசி வளைவுகள், அழகான வியூபாயின்ட்கள், தோட்டங்கள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சி எல்லாம் நிறைந்தது தான் இந்த இடம்!

தருமபுரி இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த வத்தல்மலை அமைந்துள்ளது. நகர பேருந்து, சொந்த வாகனம் மூலம் இந்த இடத்தை எளிதில் அடையலாம்.

மக்கள் அதிகம் அறியப்படாத இடமாக இருந்த வத்தல் மலை கொஞ்சம் கொஞ்சமா சுற்றுலாத் தலமாக மாறியது. கடந்த 2011 ஆம் ஆண்டு தான் நம் தமிழ்நாடு அரசு இதை அதிகாரபூர்வ சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியின் ஒரு அங்கமாக தான் இந்த வத்தல் மலை அமைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. ஊட்டி கொடைக்கானல் போல பெரிய பெரிய பூங்காக்கள், போட்டிங்க வசதிகள் இல்லாவிட்டாலும் அங்கு இருக்கும் இயற்கை அழகு உங்களை அமைதிப்படுத்த, பிரமிக்க வைக்க தவறாது.

தனியாக ஒரு பைக் ரைய்டு போகவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் வத்தல்மலை அதற்கு சிறந்ததாக இருக்கும்.

வத்தல்மலையின் உச்சியை அடைய 24 ஹேர்பின் பெண்டுகளை கடக்க வேண்டும். ஒவ்வொரு ஹேர்பின் பெண்டும் மிகவும் செங்குத்தாக இருப்பதால் அதிக கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியம்.

ரைட்டராக இருந்தால், இன்னும் வசதியாக போச்சு, ஆங்காங்கு நிறுத்தி வியூபாயின்ட்களை ரசிக்க மறக்காதீர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?