ஜல்லிக்கட்டு : "தோத்த இடத்தத்தில தான் ஜெயிக்கணும்" - வீர தமிழச்சியின் சபதம் யோகதர்ஷினி
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு : "தோத்த இடத்தில தான் ஜெயிக்கணும்" - வீர தமிழச்சியின் சபதம்

அவரது காளை பிடிபட்ட பின்னர் விழாக்கமிட்டி கொடுப்பதாக கூறிய ஆறுதல் பரிசை வேண்டாம் என மறுத்ததால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குவிந்தனர்.

Antony Ajay R

ஜல்லிக்கட்டில் காளைகளை இறக்கிவிடுவது எவ்வளவு பெருமையான விஷயம் என்பது மதுரை மக்களுக்கு மட்டுமே புரியும்.

ஒரு போட்டியாக இல்லாமல் தங்களின் கௌரவத்தை வெளிக்காட்டும் ஒன்றாக மாடுகளை பார்கின்றனர். தோற்றாலும் வென்றாலும் மாடுகளின் மீது மாறாத பிரியத்துடன் உள்ளனர்.

அப்படி மாடுகளை இறக்கிவிடுவதில் பிரபலமானவர் யோகதர்ஷினி.

தன்னுடைய காளையின் பெயர் வடமுகத்து கருப்பு. தன் 5 வயது புலிக் குளம் ரக காளையுடன் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

"எங்கள் குலசாமி பெயர் வடமுகத்து கருப்பு அதனால் அப்பா எல்லா மாட்டுக்கும் வடமுகத்துக்கு கருப்பு, முத்து கருப்பு என தான் பெயர் வைப்பார்" எனும் யோகதர்ஷினி 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகே வாடி வாசல் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

யோகதர்ஷினியின் அப்பா இவர் குறித்து பேசுகையில், "எனக்கு 3 ஆண் மகன்கள், ஒரு மகள். இவர்கள் நால்வருக்குள்ளும் எந்த பாகுபாடும் இல்லாமல் தான் நான் வளர்த்து வருகிறேன்" எனப் பேசியுள்ளார்.

வீர தமிழச்சி

பள்ளி மாணவியான யோகதர்ஷினி தனது காளைகலுடனே அதிக நேரம் செலவழிக்கிறார்.

வீரத்தமிழச்சி என்ற அடைமொழியுடன் இவர் பிரபலமாக இருக்க காரணம் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் நடந்த சம்பவமே.

அவரது காளை பிடிபட்ட பின்னர் விழாக்கமிட்டி கொடுப்பதாக கூறிய ஆறுதல் பரிசை வேண்டாம் என மறுத்ததால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குவிந்தனர்.

"மாடு பிடிபட்ட எல்லாருக்கும் பரிசு கொடுப்பது இல்லை, நான் பெண் என்பதால் எனக்கு மட்டும் கொடுப்பதாக கூறினர். ஏன் என்னைத் தனியாக பார்க்க வேண்டும்? அதனால் தான் மறுத்தேன்" எனக் கூறியிருக்கிறார் யோகதர்ஷினி.

அதன் பிறகு நடந்த ஜல்லிக்கட்டில் வென்றாலும் தோற்ற இடத்தில் ஜெயிக்க வேண்டும் என கூறுகிறார் அவர். இந்த ஆண்டு ஜல்லிகட்டில் வென்றே தீர வேண்டுமென்ற வெறியுடன் அவனியாபுரத்தில் காத்திருக்கிறார் யோகதர்ஷினி.

இளம் பெண்கள் ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் பங்கேற்பது மிகவும் நல்ல விஷயம் என வாழ்த்தியுள்ளார் நிதியமைச்சர் பிடிஆர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?