AC இல்லாமலே உங்கள் வீட்டை குளுகுளுனு வச்சுக்கணுமா? இதை கண்டிப்பா ஃபலோ பண்ணுங்க! Twitter
தமிழ்நாடு

AC இல்லாமலே உங்கள் வீட்டை குளுகுளுனு வச்சுக்கணுமா? இதை கண்டிப்பா ஃபலோ பண்ணுங்க!

வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ள ஏசியோ, ஏர் கூலரோதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு ஐஸ் கட்டி இருந்தால் போதும்! எப்புறா என்று இருக்கிறதா?

Priyadharshini R

கோடைக்காலம் ஆரம்பித்து வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. தினமும் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தினமும் ஆபிஸ், பள்ளி செல்பவர்கள் வெப்பத்தில் தத்தளித்து வியர்வையில் குளியலாடி செல்கின்றனர்.

சரி பகலில் தான் இப்படி இருக்கிறது என்றால் இரவிலும் அந்த வெயிலின் தாக்கம் இருக்கிறது.

summer season

நாள் முழுவதும் களைத்து சோர்வாக இருப்போருக்கு இது மிகவும் கடினமான சூழ்நிலையாக இருக்கும், நிம்மதியாக உறங்க கூட முடியாது.

இதற்காகத்தான் பலரும் வீட்டில் ஏசியை அத்தியாவசியப் பொருளாக வைத்திருக்கின்றனர்.

ஆனால் பலருக்கும் இது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. அவர்களுக்கான பதிவு தான்! ஏசி தருவதை போன்று குளுகுளு காற்று வேண்டுமா? இந்த டிப்ஸை தினமும் இரவு ஃபாலோ பண்ணுங்க!

வீட்டை குளுமையாக வைத்துக்கொள்ள ஏசியோ, ஏர் கூலரோதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு ஐஸ் கட்டி இருந்தால் போதும்! எப்புறா என்று இருக்கிறதா?

தூங்குவதற்கு முன் ஜன்னல் முன் டேபிள் ஃபேனை வையுங்கள். ஒரு கிண்ணம் முழுவதும் ஐஸ் கட்டிகளை எடுத்துக்கொண்டு, அதை ஃபேன் முன்னாடி வையுங்கள்.

கிண்ணம் வழிய வழிய ஐஸ் கட்டியை வைக்க வேண்டாம். வெப்பத்தில் ஐஸ் கட்டி உருகி தண்ணீர் கீழே வழியும். எனவே அதற்கு ஏற்ப வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் குளுமையான காற்று தூங்கும் போது கிடைக்கும். அதோடு அறையும் குளுமையாக இருக்கும்.

இந்த முறை பின்பற்றப்பட்டால், அறையை குளிர்விக்க அதிக நேரம் எடுக்காது. அதேசமயம் ஐஸ் கட்டிகள் கரைந்துவிட்டால் உடனே அறை வெப்பமாகிவிடும்.

எனவே அவ்வப்போது எழுந்து உருகிய நீரை ஊற்றிவிட்டு மீண்டும் ஐஸ் கட்டிகளை கொட்டி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்ய அறை இரவு முழுவதும் குளுர்ச்சியாக இருக்கும். உங்களால் வெக்கை இல்லாமல் உறங்க முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?