பங்காரு அடிகளார் மரணம்: முதலவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி - ’அம்மா’ எனப்படும் இவர் யார்?  ட்விட்டெர்
தமிழ்நாடு

பங்காரு அடிகளார் : லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ’அம்மாவாக’ இருந்த ஆன்மிக குரு - யார் இவர்?

இவரது புகழ் எட்டு திக்கிலும் பரவ, இவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். தொண்டு பணிகளை செய்யத்தொடங்கினார் பங்காரு அடிகளார்.

Keerthanaa R

மேல்மருவத்தூர் பீடாதிபதி பங்காரு அடிகளார் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் முதல் பாமர மக்கள் வரை திரளென வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

யார் இந்த பங்காரு அடிகளார்?

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார். இவரை பின் தொடர்பவர்கள், மற்றும் ஆதி பராசக்தியின் பக்தர்கள் இவரை அம்மா என்றே அழைக்கின்றனர்

பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் வசித்த பகுதியில் அருள்வாக்கு சொல்வதில் தொடங்கியது இவரது பயணம்.

ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் ஒன்றை நடத்தினார் பங்காரு அடிகளார். இவர் தன்னை ஆதிபராசக்தியின் அம்சமாக அறிவித்துக்கொண்டார். இதனலேயே இவரை அம்மா என்று அழைக்கத்தொடங்கினர். இவருக்கு பக்தர்களும் அதிகரிக்கத் தொடங்கினர்.

சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இவரது ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் செயல்படுகின்றன. 1980ல் இருந்து பரவத் தொடங்கிய இந்த வழக்கம், தற்போது 7,000த்துக்கும் மேற்பட்ட மன்றங்கள் இந்தியா உள்பட 10 நாடுகளில் செயல்பட்டு வருகிறது என அவரது அறக்கட்டளை இணையதளம் குறிப்பிடுகிறது.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான போராட்டங்கள் பற்றி பல ஆண்டுகளாக பார்த்துவருகிறோம்.

இப்படி இருக்கையில், பங்காரு அடிகளார், சபரிமலைக்கு ஆண்கள் மாலை போட்டு செல்வது போல, ஆதிபராசக்திக்கு பெண்கள் மாலைபோட்டுக்கொண்டு வழிபாடு செய்யும் முறையை கொண்டுவந்தார். இதனால் பெண்கள் கூட்டம் கூட்டமாக ஆதிபராசக்தி கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

அதுமட்டுமல்லாமல், கருவறைக்குள் பெண்களும் சென்று பூஜைகள் செய்யலாம் என்றும், மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் கோவிலுக்குள் பிரவேசிக்கலாம் என பல புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவந்தார்.

இவரது புகழ் எட்டு திக்கிலும் பரவ, இவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்தனர். தொண்டு பணிகளை செய்யத்தொடங்கினார் பங்காரு அடிகளார்.

தனது ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் மூலமாக, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் இவரது பெயரில் செயல்பட்டன.

மக்கள் மட்டுமல்லாது, அரசியல் செல்வாக்கையும் பெற்றிருந்தார் பங்காரு அடிகளார். திமுக, அதிமுக ஆகிய பெருங்கட்சிகளின் பெயர் சொல்லும் தலைவர்கள் இவரை பின் தொடர்பவர்களாக இருக்கின்றனர்.

ஒருவர் அதிக புகழில் இருக்கிறார் என்றாலே சர்ச்சைகள் என்பதை தவிர்க்க முடியாது. அதிலும் குறிப்பாக பெண் பக்தர்கள் அதிகமாக இருக்கும் பங்காரு அடிகளாரும் விதிவிலக்கல்ல. இவரது கல்வி நிறுவனங்களில் கேப்பிட்டேஷன் ஃபீ, அதாவது சேர்க்கை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால் 2010ஆம் ஆண்டு இவருக்கு சம்பந்தமான இடங்களில் வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது அவரது வீட்டில் இருந்து மட்டுமே சுமார் 9 கோடி பணத்தை அதிகாரிகள் மீட்டதாக செய்திகள் கூறின. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளிலும் , கணக்கில் வராத பணம் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த சர்ச்சைகள் இருந்தபோதிலும், 2019ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.

மேலும் 2022ல் திமுக அமைச்சர் கே என் நேரு இவரிடம் ஆசி பெறும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில், பங்காரு அடிகளார் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு பெருந்தலைவர்கள் அஞ்சலி செலுத்தியும், இரங்கல்கள் தெரிவித்தும் வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?