ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலம் வரும் போது புயல் குறித்த அச்சமும் நம்மைச் சூழ்ந்துவிடும்.
நாட்டின் பல பகுதிகளில் ஏற்படும் புயல்களுக்கு வரிசையாக பலப் பெயர்களை வைத்து வருகின்றனர்.
இந்த பெயர்கள் விரைவாக மக்களிடம் சென்று சேர்வதுடன் பரவலாக உச்சரிக்கப்படுகிறது.
புயலடித்து ஓய்ந்த பின்னரும் செய்தி தொலைக்காட்சிகளையும் செய்திதாள்களையும் நிறைக்கிறது அந்த பெயர். சமீபத்தில் உருவாகி தமிழகத்தை தாக்கும் புயலுக்கு மாண்டஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புயல்களை ஆரம்பத்தில் அதன் வானிலைப் புள்ளி விவரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பெயர்களால் அழைத்தனர்.
அது மக்களுக்கு தெரிவிக்கவும் ஆவணப்படுத்தவும் கடினமாக இருந்ததால் புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கம் உருவானது.
1979 வரையிலும் எல்லா புயல்களுக்கும் பெண்களின் பெயரையே வைத்தனர்.
ஆளாளுக்கு புயல்களுக்கு பெயர் சூட்டுவதைத் தடுக்க சர்வதேச காலநிலை அமைப்பானது (World Meteorological Organisations) புவியியல் ரீதியான பெயர்களை வைக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தது.
இதன் படி மொத்த உலகமும் 7 கடற்பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் என வெவ்வேறு கடல் பகுதிக்கு தனித்தனி பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இதனுடன் வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகள் வழங்கும் பெயர்களைக் கொண்டு ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதிலிருக்கும் அடுத்ததடுத்த பெயர்களை புயல்களுக்கு சூட்டுகிறது சர்வதேச வானிலை மையம்.
இந்த பட்டியல்கள் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று உருவாக்கப்படும்.
ஒரு முறை வைக்கப்பட்ட பெயர் மீண்டும் வைக்கப்படாது.
புயல் வருவதற்கு முன்னரே அதற்கான பெயர் சூட்டப்படுகிறது.
இப்போது வைப்பட்டுள்ள 'மாண்டஸ்' என்ற பெயர் ஐக்கிய அரபு அமீரத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust