Yelagiri Twitter
தமிழ்நாடு

ஏலகிரி முதல் ஏற்காடு வரை - தமிழகத்தின் இந்த புகழ்பெற்ற டிரெக்கிங் பாதைகள் தெரியுமா?

டிரெக்கிங் என்றாலே வெளிமாநிலம், வெளிநாடு என்றெல்லாம் யோசிப்பார்கள். ஆனால் தமிழகத்திலேயே பார்க்க வேண்டிய, அனுபவிக்க கூடிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன

Priyadharshini R

பயணம் செய்வது பலருக்கு பிடித்தமான ஒன்று. பயண பிரியர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று புதுவிதமான அனுபவத்தை பெறுகின்றனர்.

அதிலும் சாகச பயணிகளுக்கு Trekking செல்வது அவ்வளவு பிடிக்கும். டிரெக்கிங் என்றாலே வெளிமாநிலம், வெளிநாடு என்றெல்லாம் யோசிப்பார்கள். ஆனால் தமிழகத்திலேயே பார்க்க வேண்டிய, அனுபவிக்க கூடிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அப்படி தமிழகத்தில் உள்ள டிரெக்கிங் மலை பாதைகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

பர்வதமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென்மகாதேவமங்கலத்தை ஒட்டியுள்ளது பர்வதமலை.

சித்தர்களுக்கு பெயர் பெற்ற இந்த மலை 2,855 அடி உயரம் என கூறப்படுகிறது. இந்த மலை ஜவ்வாது மலையின் கிளை என்றும் குறிப்பிடப்படுகிறது.

மூங்கில் செழித்து வளரும் இப்பகுதியில் டிரெக்கிங் சென்றால் கண்களுக்கு ரம்மியமான காட்சிகளும், புதிய அனுபவங்களும் கிடைக்கப் பெறலாம்.

ஏலகிரி

ஏலகிரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ளது. சுமார் 200 முதல் நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ ஆகும். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்டும் ஏலகிரி மலையேற்றம் செய்ய சிறந்த இடமாகும்.

வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. அங்கு இருந்து மலையேற்றம் செய்யலாம்

அவலாஞ்சி

நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும் . ஏரியைச் சுற்றிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் நிலப்பகுதி அமைந்துள்ளது

அதைச் சுற்றியுள்ள உள்ள பாதையில் டிரெக்கிங் செய்யும் சுற்றுலாப்பயணிகள் புதுவிதமான அனுபவதை பெறுவார்கள்.

ஏரியின் அருகில் சுற்றுலாப்பயணிகள் கூடாரங்களை அமைத்தும் தங்குகலாம். ஏரியில் படகுச் சவாரி மேற்கொள்ளுவதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதர பொழுதுபோக்குகளாகும்.

இத்தகைய பகுதிகள் மலையேற்றங்களுக்கு சிறந்த இடமாகும். பனிக்காலங்களில் மலையேற்றம் செய்வது அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.

ஏற்காடு மலைகள்

ஏற்காடு கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 5,326 அடி உயரத்தில் உள்ளது.

ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.

வால்பாறை

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது.

வால்பாறையின் வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளும், பனி மூடிய மலைகளும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும்.

சிலிர்ப்பூட்டும் இந்த மலையேற்றங்களுக்கு செல்ல இப்போதே தயாராகுங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?