couple Twitter
Viral Corner

”காதல் ஆசை யாரை விட்டதோ” 76 வயது பாட்டியிடம் காதலில் விழுந்த 19 வயது இளைஞர்

19 வயதான இளைஞர் ஒருவர் 76 வயது பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். 19 வயதான கியூசெப் டி'அன்னா பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.

Priyadharshini R

காதலுக்கு கண் இல்லை என்பதெல்லாம் பழைய பழமொழி, டிரெண்ட் மாறி ”காதல் ஆசை யாரை விட்டதோ” என்று யாரையும் விட்டு வைக்காமல் காதல் வலையில் வீழ்த்தி வருகின்றனர்.

அப்படி ஒரு காவிய காதலை 19 வயது இளைஞர், 76 வயது பாட்டியிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

வாசிங்டனில் 19 வயதான இளைஞர் ஒருவர் 76 வயது பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்துள்ளார். 19 வயதான கியூசெப் டி'அன்னா பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.

couple

கியூசெப் டி அன்னா வெளியிட்டுள்ள பதிவில் தனது காதலிக்கு காதலை சொல்வது போல் முழங்கால் போட்டு அமர்ந்து இதய வடிவில் பல சிவப்பு பலூன்களை வைத்திருக்கிறார்.

மற்றொரு புகைப்படத்தில், தனது காதலிக்கு முத்தமிடுவதை போல பல புகைப்படங்களை இணைத்து, வீடியோவாக வெளியீட்டுருந்தார். இதில் அவர், 'எங்கள் வாக்குறுதி' என்று தலைப்பிட்டுள்ளார்.

இதனை இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த காதலை பலரும் வாழ்த்துவார்கள் என்று எண்ணிய அன்னாவுக்கு கடும் விமர்சனங்களை எழுந்து வருகிறது. இன்னும் சிலர் சிறுவன் பாட்டியின் பணத்தை பார்த்து திருமணம் செய்து உள்ளார் என்று கூறி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?