April Fools Day Canva
Viral Corner

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் - ஒரு சுவாரசியமான வரலாறு

NewsSense Editorial Team

ஏப்ரல் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் பிரான்சிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் இத்தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மெதுவாக மற்ற நாடுகளும் இந்த நாளைக் கொண்டாடத் துவங்கின.

இந்த நாளில் மக்கள் தங்கள் நண்பர்களுடன் குறும்புகள் மற்றும் நகைச்சுவையுடன் விளையாடுகிறார்கள். முடிவில் நண்பர்களை ஏமாற்றி விட்டு முட்டாள் தினம் என்று கத்துகிறார்கள். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவருக்கு இந்த ஆண்டின் இன்சென்டிவாக ரூ 10,000 ஊதியம் அதிகரித்திருக்கிறது என்று சக ஊழியர்கள் சொல்வார்கள். அவரும் அந்த ஊதிய உயர்வின் கற்பனையில் திளைப்பார். இறுதியில் முட்டாள் தினம் என்று கூறும் போது நொந்துபோவார். இன்னும் ஒரு தலைக் காதலர்களுக்கு அவர்கள் காதலர்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக நண்பர்கள் சீரியாஸாகத் தெரிவித்து விட்டு பின்னர் கலாய்ப்பார்கள். இந்த ஏமாற்று விளையாட்டுகளுக்கு முடிவே இல்லை.

இந்தக் குறும்புகளின் அளவு மற்றும் இயல்பு வேறுபடலாம். ஆனால் நோக்கமெனவோ மற்றவரை வேடிக்கையாக நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் விதி.

ஏப்ரல் முட்டாள் தினத்தை முன்னிட்டு அது பற்றி அறியாத உண்மைகளை இங்கே கணாலாம்.

April Fools Day

வரலாறு மற்றும் முக்கியத்துவம்

அந்த நாள் எப்படி உருவானது என்று பல கதைகள் இருந்தாலும், வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி பொதுவாக நம்பப்படும் ஒன்று உள்ளது. ஜூலியன் நாட்காட்டியிலிருந்து பிரான்ஸ் கிரிகோரியன் நாட்காட்டிக்கு (இன்றைக்கு நாம் பின்பற்றும் நாட்காட்டி) மாறிய பிறகு 1582 ஆம் ஆண்டில் இந்த நாள் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஜூலியன் நாட்காட்டியின்படி, புத்தாண்டு இந்து நாட்காட்டியைப் போலவே ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

ஜூலியன் நாட்காட்டியின்படி சூரியனைச் சுற்றி ஒரு சுற்று முடிக்கப் பூமி எடுக்கும் சரியான மற்றும் உண்மையான நேரம் பிரதிபலிக்கப்படவில்லை. சூரியனைப் பூமி சுற்றும் நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டதால் உலகம் கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. இதனால் கிரிகோரியன் நாட்காட்டியின்படி, புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் கிரிகோரியின் நாட்காட்டியைத்தான் பயன்படுத்துகிறோம். வரலாற்றையும் இந்த நாட்காட்டியின் படிதான் படிக்கிறோம்.

இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தி, கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்ஸ் ஆனபோதும், பல நாடுகள் முதலில் ஏற்கவில்லை. பின்னர் மெதுவாக அதை ஏற்கத் தொடங்கினார்கள். எனவே அவர்கள் கிரிகோரியன் நாட்காட்டிக்குப் பதிலாக ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றுவதால் ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். சில அறிக்கைகளின்படி, அனைத்து நாடுகளும் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுச் செயல்படுத்தக் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆனது.

இறுதியில், இந்த நாள் 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் முக்கியத்துவம் பெற்றதோடு மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், மக்கள் குற்ற உணர்ச்சியின்றி எதையும் எதிர்கொள்ளும் வண்ணம் மற்றும் பெரும்பாலும் பாதிப்பில்லாத குறும்புகளை விளையாடலாம்.

சரி, நீங்கள் இன்று யாரை எப்படி ஏமாற்றப் போகிறீர்கள்?

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?