நடிகை ஆம்பர் ஹெர்டுடனான அவதூறு வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு ஜானி டெப்க்கு ரசிகர்கள் அதிகரித்தனர். ஹாலிவுட்டில் மீண்டும் ஒரு வால் நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார் ஜானி டெப்.
இந்த வால் நட்சத்திரத்தை வைத்து ஒரு பார் செய்த வாலுத்தனம் தான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.
பாரை விளம்பரப்படுத்துவதற்காக ஜானி டெப் ஷாட் என்ற மது பேகேஜை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த பார். அவதூறு வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு ஜானி டெப் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டும் விதமாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அது என்ன ஜானி டெப் ஷாட்?
"நீங்கள் பாதுகாப்பில்லாதது போலவோ அல்லது உதவியற்றவராகவோ உணர்ந்தால், பாருக்கு வந்து ஒரு ஜானி டெப் ஷாட்டை ஆர்டர் செய்யுங்கள்" என அந்த பலகையில் எழுதியிருந்தது.
அதற்கு மேலாக ஜானி டெப் ஷாட் உங்களை பாதுக்காக்கும் என எழுதப்பட்டிருக்கும்.
அந்த பலகையில் நீட், ஆன் தி டாக்ஸ், வித் லைம் என மூன்று வகைகள் இடம் பெற்றிருந்தன.
நீட்
நீட் ஆர்டர் செய்தால் நீங்கள் குடித்து முடித்த பிறகு பார் ஊழியரே உங்களை பாருக்கு வெளியில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்து விடுவார்.
ஆன் தி ராக்ஸ்
ஒருவேளை ஆன் தி ராக்ஸ் ஆர்டர் செய்தால் நீங்கள் அளவிற்கு அதிகமாக குடித்த பின்னர், உங்களுக்காக பார் ஊழியர் கேப் புக் செய்து உங்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.
வித் லைம்
இது தான் ஹைலைட். நீங்கள் வித் லைம் ஆர்டர் செய்தால், உங்கள் அலப்பறைகளைக் கட்டுப்படுத்த பார் ஊழியர் போலீசைக் கூப்பிடுவார்.
நம்ம ஊர் பாரிலும் இந்த வசதிகள் இருந்தால் நீங்கள் எந்த ஷாட்டைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust