முதல் மாத சம்பளத்தில் கால்பந்து பூட்ஸ் வாங்கி கொடுத்த அண்ணன்- தம்பியின் ரியாக்சன் வைரல் Twitter
Viral Corner

முதல் மாத சம்பளத்தில் அண்ணன் கொடுத்த சர்பிரைஸ்; நெகிழ்ந்த தம்பி - மனதை உருக்கும் வீடியோ!

Antony Ajay R

இணையத்தில் உலாவும் போது பலவகையான வீடியோக்களை கடந்து செல்கிறோம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில கோபப்பட, சில கேள்வி கேட்க வைக்கின்றன.

சில வீடியோக்கள் நம்மை உணர்ச்சிப் பூர்வமாக்கி மனதுக்கு நெருக்கமாகின்றன.

அப்படிப்பட்ட ஒரு வீடியொ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நம் எல்லாருக்குமே நமது முதல் மாத சம்பளம் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. நம் குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக அதனை செலவிட நினைப்போம்.

அப்படி ஒரு அண்ணன் அவரது தம்பிக்கு வாங்கிக்கொடுத்த கிஃப்ட் தான் இந்த வீடியோ!

தூங்கிக்கொண்டிருந்த தம்பியை எழுப்பி அவனுக்காக வாங்கி வந்திருந்த ஸ்னீக்கர்களை அண்ணன் காட்டியதும் அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் உணர்ச்சி வசத்தில் அண்ணனைக் கட்டித் தழுவுகிறான்.

பின்னர் கண்ணீருடன் அவர் வாங்கி வந்திருந்த ஷாக்ஸை போட்டுப்பார்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது. நெருக்கமான உறவுகள் கொடுக்கும் இது போன்ற சர்பிரைஸ்கள் எப்போதும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் உருக்கமான கமன்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் இந்த சகோதரர்களின் பெற்றோர் இவர்களை நன்றாக வளர்த்திருப்பதாக கூறுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?