துபாய் ஷேக்கின் ராட்சத கார்! 46 அடி நீளமான Hummer H1 X3-ன் சிறப்புகள் என்ன? Twitter
Viral Corner

துபாய் ஷேக்கின் ராட்சத கார்! 46 அடி நீளமான Hummer H1 X3-ன் சிறப்புகள் என்ன?

Antony Ajay R

சாதாரண ஹம்மர் வகை ஜீப்களுக்கு நடுவில் துபாய் ஷேக் ஒருவரின் ராட்சத ஹம்மர் வலம் வரும் வீடியோ இணையத்தை அலற வைத்தது.

மில்லியனரான அவர் 'ரெயின்போ ஷேக் ஆஃப் துபாய்' என அறியப்படுகிறார். அவரது இயற்பெயர் ஷேக் ஹமத் பின் ஹம்டன் அல் நஹ்யான் (Sheikh Hamad bin Hamdan Al Nahyan)

இந்த பணக்கார மனிதருக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அவரது வருமானத்தில் பாதிக்கும் மேலாக கார்களை வாங்கிக் குவித்துள்ளார். பலவகையான கார்கள் அடங்கிய கலக்‌ஷனை உருவாக்குவது அவரது திட்டம்.

அந்த வகையில் ராட்சத ஹம்மர் ஹெச்1 சாதாரண வாகனத்தை விட 3 மடங்கு பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் கிட்டத்தட்ட 46 அடி நீளமும் 21.6 அடி உயரம் மற்றும் 19 அடி அகலமானது. இது ஷேக் ஹம்டனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.


ஷேக் ஹம்டன் எமிராடி ராயல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சொத்துமதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என்கின்றனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களில் இந்த ராட்சத வாகனத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் ஏதோ பெரிய கட்டடம் இருப்பது போல உயர்ந்து நிற்கிறது ஹம்மர் ஹெச்1 எக்ஸ்3 வாகனம்.

வெளியில் இருந்து பார்க்க மட்டுமல்ல அதன் உள் வடிவமைப்பும் வீடு போன்றே அமைக்கப்பட்டுள்ளது. உள்பகுதி மேலும் கீழும் இரண்டு தளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


பெரிய முன் அறை, கழிவறை, ஓட்டுநர் அறை போன்ற அறைகள் இந்த வாகனத்தில் இருக்கிறது. இந்த வாகனம் உலகில் மிகப் பெரிய ஜீப் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

ஷேக் ஹம்டனின் 3000 கார்கள் இருக்கும் கலக்‌ஷனில் இதுவும் இணைந்துள்ளது. தனது 4X4 கார் கலக்‌ஷனுக்காக கின்னஸ் சாதனைகள் விருதைப் பெற்றுள்ளார் ஷேக் ஹம்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?