<div class="paragraphs"><p>Rose Day</p></div>

Rose Day

 

Twitter

Viral Corner

ரோஸ் டே முதல் வேலண்டைன்ஸ் டே வரை - செய்ய வேண்டியவை என்னென்ன ?

ஆர்.ஜே. கிரேசி கோபால்.

நேர்த்தியான அழகைக் குறிக்கும் சிவப்பு ரோஜாக்களைப் பயன்படுத்தாத காதலே இல்லை என்றும் சொல்லலாம். பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வரிசையாக காதல் வாரம் களை கட்டியுள்ளது. கொரோனா, லாக்டவுன் எல்லாம் சற்று ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், காதல் பிரச்சாரம் இந்த வருடம் களை கட்டுகிறது என்றே சொல்லலாம். 2K கிட்ஸ்கள் உடனடியாக ப்ரபோஸ், வீட்டில் சொல்லி திருமணம், அடுத்த வருடமே மூன்று பேராக போஸ்ட் போடுவது இன்னும் 80s கிட்ஸ்களுக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்து வருகிறது. இருப்பினும் வெறுப்பேற்றுவதற்காகவே வித விதமாக காதல்களை வெளிப்பாடாக காட்டுவதில் இன்றைய இளைஞர்கள் விருவிருப்பாகவே உள்ளனர்.

எந்த நாள் என்ன டே ?

இன்று உங்கள் காதலியையோ, காதலனையோ மனைவியையோ, கணவனையோ சந்திக்க முடியாமல் போகலாம். அல்லது மறந்து போயிருக்கலாம். அப்படியானவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை தருகிறது இந்த காதல் மாதம்.

Rose Day

ரோஸ் டே (Rose Day)

பிப்ரவரி 7-ஆம் தேதியான இன்று, ரோஜா பூக்களை பகிர்ந்து காதலை வெளிப்படுத்தும் தினமாகும். ஏற்கனவே காதல் செய்வோரும் புதிதாக காதலை தொடங்கவிருப்போருக்கும் இந்த நாள் முக்கியமான நாளாகும்.

Propose Day

ப்ரொபோஸ் டே (Propose Day)

பிப்ரவரி 8-ஆம் தேதி தங்கள் காதலை தெரிவிக்கும் நாட்களாகும். அன்னியன் பட அம்பி போல, காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டாம். ஏனென்றால் படம் படம்தான். நிஜம் நிஜம்தான். தர்ம அடி கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நேரடியாக, சமூக வலைதளங்கள் மூலமாக, மோதிரம் அல்லது சர்ப்ரைஸ் கிஃப்ட் மூலமாக, தங்களுடைய காதலை வெளிப்படுத்தும் நாள் இது.

Chocolate Day

சாக்லேட் டே ( Chocolate Day )

பிப்ரவரி 9-ஆம் நாள் சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விதவிதமான சாக்லெட் வகைகளை கொடுத்து உங்கள் துணையை அசத்தலாம். ஏனென்றால் காதல் கிடைப்பது என்பதை விட அதை தக்க வைத்துக்கொள்வது அதனினும் பெரிய விஷயம். திருமணமான தம்பதிகள் குழந்தைகளுக்கு வீட்டில் சாக்லெட் வாங்கி வைத்திருந்தால், அதில் ஒன்றை எடுத்து உங்கள் துணைக்கு கொடுத்து ஹாப்பி சாக்லெட் டே என சொல்லி அசத்துங்கள்

Teddy Day

டெட்டி டே ( Teddy Day )

பிப்ரவரி 10 தேதி டெடி டே. கணவனுக்கோ காதலனுக்கோ கிடைக்காத பெரிய வரம் டெடிகளுக்கு கிடைத்திருக்கிறது. பெண்கள் அதிக நேரம் கொஞ்சுவதும் விளையாடுவதும் டெடிகளுடன் தான். ஏன் உறங்குவதும் கூட. டெடி பொம்மையாக பிறந்திருக்கலாம் என நினைப்பவர்களும் உண்டு. வீட்டில் கரடி போல கத்தும் கணவன்மார்கள், காதலர்கள் இன்றை நாளில் ஒரு கரடி பொம்மையை பரிசளித்து, இனிமேல் கத்தாமல் சமத்தாக நடந்துகொள்கிறேன் என்று காதலை மெருகூட்டலாம்.

Promise Day

பிராமிஸ் டே ( Promise Day )

பிப்ரவரி 11-ஆம் நாள் காதலர் இருவரும் சத்தியம் செய்து தங்கள் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் தினம் இது. எந்த துயர் வந்தாலும் இணைபிரியாமல் விட்டுக்கொடுக்காமல் இருப்போம் என்ற சத்தியம் முதல், உன்னைத்தவிர பேரன்பு செலுத்த இந்த உலகத்தில் யாருமில்லை, என் மொத்த அன்பும் உனக்கே என மனதார, உண்மையாக கூறி சத்தியம் செய்யலாம். குறிப்பாக அதை இறுதிவரை கடைபிடிக்க வேண்டும். சத்தியம் சக்கரை பொங்கல் மாதிரி என போங்கு காட்டினால், இணையாக இருப்பவரும் அதையே கொடுக்க தயாராக இருப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

Hug Day

ஹக் டே ( Hug Day )

பிப்ரவரி 12 அன்று கட்டிப்பிடிதினம். இத்தனை நாட்களாக சிறப்பு தினங்களை மறந்துபோயிருந்தாலும், ஓடி வந்து மொத்த அன்பையும் கொட்டி ஒரு அணைப்பில் எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்கு பிடித்த விஷயத்தை சொல்லி அணைத்துக்கொள்ள, பெருமிதமாக நினைக்கும் விஷயத்தை சொல்லி நெற்றியில் முத்தமிட, இந்த நாள் மிக சிறப்பான நாளாக அமையும். வாழ்வும் கூட

Kiss Day

கிஸ் டே ( Kiss Day )

பிப்ரவரி 13ம் தேதி முத்த தினம். ப்ளைன் கிஸ்கள் இமோஜி முத்தமாக மாற்றமடைந்திருக்கும் இந்த நாளில் நிஜ முத்தமும் முடிந்தால் பரிசளித்துப்பாருங்கள். நேற்றே கட்டிப்பிடி வைத்தியத்தின் போது மீதம் வைத்திருக்கும் முத்தங்களை இன்று முழுமையாக்கிவிட சிறந்த நாள். செல்ஃபி முத்தம் முதல் திணறடிக்கும் முத்தம் வரை அவரவர் திறமைக்கு ஏற்ப பார்த்துக்கொள்ளுங்கள்.

Valentine’s Day

வேலண்டைன்ஸ் டே (Valentine’s Day)

பிப்ரவரி 14 அன்று எப்படியெல்லாம் கொண்டாட நினைத்தீர்களோ அத்தனை அன்பையும் மொத்தமாய் கொட்டி கொண்டாட வேண்டிய நாள் இன்று. மேலே சொன்ன அத்தனை நாள் சிறப்புகளையும் இந்த ஒரு நாளில் ஒன்றாக இணைத்து கொடுத்தாலும் அத்தனை மகிழ்ச்சி அடைந்து காதல் காட்டாறு போல கரைபுரண்டு ஓடும் என்பதில் சந்தேகமே இல்லை.

“ அது போன மாசம்.,.. நான் சொல்றது இந்த மாசம்” என மாதம் ஒரு ப்ளானை மாற்றும் மகத்தான இதயங்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். காதல் வெறும் டைம் பாஸ் அல்ல. அது உணர்வுகளை தாண்டியது உணர்சிகளோடு சம்பந்தப்பட்டது. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது.

முதலில் காதலியை மனைவியாக நினைத்து, அத்தனை அக்கறையும் அன்புகளையும் புரிதலையும் கொடுக்க வேண்டும்.

திருமணமான பின்பு காதலியை கொஞ்சுவது போல கொண்டாட வேண்டும். இதேதான் பெண்களுக்கும்.

இப்படி ஒவ்வொரு நாளையும் சிறப்பாக மகிழ்வோடு கொண்டாட, நல்ல புரிதலோடு அந்த அன்பு காலம் கடந்து நிற்கும். அனைவருக்கும் ரோஸ் டே வாழ்த்துக்கள்

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?

அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!