Elon Musk- Maye Musk Twitter
Viral Corner

Elon Musk: அழகிய ஸ்விம் சூட்டில் எலானின் அம்மா மேய் மஸ்க்- இணையத்தை கலக்கும் 70-வயது மாடல்

Keerthanaa R

டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்கின் தாய் மேய் மஸ்க் அழகிய நீச்சல் உடையில் கொடுத்த போஸ் இணையவாசிகளை கவனிக்க வைத்துள்ளது. ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேடட் எனும் பத்திரிக்கையின் முன் பக்கத்தை அலங்கரித்துள்ளது இவரது இந்த புகைப்படம். இது SI Swim22 விற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். மேலும், SI Swim22-வின் மிக வயதான மாடல் இவர்தான்.

மேய் மஸ்க்கை நம் எல்லோருக்கும் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்கின் தாயக தெரியும். ஆனால் இவர் கனடா நாட்டை சேர்ந்த மிக பிரபலமான மாடல் அழகி மற்றும், உணவியல் நிபுணர். ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரடடின் கவர் பேஜ்காக இவர் மாடலாக தேர்வுசெய்யப்பட்டதை அறிந்து அதீத மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்த மேய், "வயதானவர்களும் நீச்சலுடையில் அழகாகக் காட்சியளிப்பர் என்ற இவர்களது நோக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பெண் தன்னை பற்றிக்கொண்டுள்ள பார்வை இதனால் மாறும்" என்றார்.

தனக்கு நீச்சலுடை அணிவதற்கான உடற்வாகு இருந்ததாகத் தான் எப்போதும் நினைத்ததில்லை என்ற மேய், இத்தனை வருடங்களில் தான் இதுவரை ஃபேஸ்லிஃப்டோ (facelift), போடாக்ஸ் ஊசிகளோ (Botox Injection) போட்டுக்கொண்டதில்லை என்றும், தான் உட்கொள்ளும் உணவுகளே இதுநாள் வரை தன்னை அழகாய் வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

மேய் மஸ்க்கிற்கு மொத்தம் மூன்று குழந்தைகள். எலான், கிம்பால், மற்றும் டோஸ்கா. இவர்கள் மூவரையும் சிங்கிள் மதர் ஆக இருந்து வளர்த்தவர் மேய். எலான் மஸ்க் இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.

Maye Musk

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?