நித்தியானந்தா Twitter
Viral Corner

கானா நாட்டின் எப்புடுவுடன் கைலாசா கலாசார உறவு - நித்யானந்தா என்ன சொல்கிறார்?

Priyadharshini R

ஆசிரமம் நடத்திவந்த நித்தியானந்தாவின் மீது பல்வேறு புகார்கள் எழுந்திருந்தது. அதாவது நடத்திவரும் ஆசிரமத்தில் பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது வைக்கப்பட்டது.

இதையடுத்து நித்தியானந்தா தலைமறைவாக உள்ளார். கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கி அங்குக் குடியேறி விட்டதாகக் கூறினார். அங்கிருந்து சீடர்களுக்குத் காணொளி வாயிலாகவோ முகநூல் வாயிலாகவோ உரையாற்றி வருகிறார்.

நித்தியானந்தா

இதற்கிடையில் நித்தியானந்தா இறந்துவிட்டதாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவித்து சில பதிவுகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தற்போது மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் உள்ள எப்புடு என்ற மாவட்டத்துடன் கைலாசா நாடு சேர்ந்து இரு நாட்டின் உறவை மேம்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

kailasa Story

இதுதொடர்பாக, நித்தியானந்தா தன்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பழமையான கலாச்சாரம், இந்துக்களுக்கான முதல் நாடான கைலாசா, புரிதல், மத சுதந்திரம் , இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு (Effutu) மாவட்டத்துடன் இணைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாசா எங்கு அமைந்துள்ளது என்பது அதிகாரப்பூர்வமாகத் யாருக்கும் இதுவரை தெரியாத நிலையில், தற்போது எப்புடுவுடன் கலாச்சார உறவிற்கான புதிய தொடக்கத்தை போட்டதால் கைலாசா எங்குள்ளது என தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?