படங்களாக இருந்தாலும் விளம்பரங்களாக இருந்தாலும், ஒரு சில விஷயங்களை காட்சிப்படுத்தும்போது நாம் மிக கவனத்துடன் இருப்பது அவசியம். யாரையும் புண்படுத்தாதவாறு காட்சிகளும் வசனங்களும் அமைப்பது கடமையும் கூட.
taboo எனக் கூறப்படும் விஷயங்களை உடைத்துப் பேசி படமாக்குவது இந்திய சினிமாவில் ட்ரெண்டாக உள்ளது. அந்த வரிசையில், பாலியல் தொழிலாளிகளின் கதைகளாக வந்த படங்களும் அடங்கும்.
டெம்ப்ளேட் சினிமாவைக் கடந்து எடுக்கப்படும் இந்த படங்களில், அவர்களின் கண்ணியம் குறையாமல் தான் காட்சிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
புதுப்பேட்டையில் சினேகா துவங்கி, சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்த மாயா வரை, கண்ணியமான காட்சிகள் அமையும் போது அந்த கதாபாத்திரத்தை எடுத்து நடித்தவர்களை ரசிகர்கள் கொண்டாடிதான் வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில், கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியைப் பயன்படுத்தி, 'ஆண் வாடிக்கையாளர்கள்' கவனத்தை ஈர்க்க விளம்பரம் செய்திருந்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது
அந்த வகையில், சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி பலரது கவனத்தை ஈர்த்தது. இதில் கங்குபாயாக நடித்திருந்த ஆலியா பட்டிற்கு பாராட்டுகள் குவிந்தன. இது நிஜத்தில் பாலியல் தொழிலாளியாக இருந்து, பல அவமானங்களைக் கடந்து பிற்காலத்தில் சமூகத்தில் பெரும் செல்வாக்குடன் ஒரு தவிர்க்க முடியாத புள்ளியாக மாறிய பெண்ணின் கதை.
இந்த படத்தில், பாலியல் தொழில் செய்வோரின் விடுதியின் முன்பு நின்று ஆலியா கை நீட்டி கூப்பிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.
அந்த வீடியோவைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள ஸ்விங் உணவகம், "Aja na Raja - what are you waiting for?" என்ற தலைப்புடன், இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்திருந்தது. அதில் கூடவே, Men's Monday with 25% discount for men என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மையில் சலுகைகள் கொடுப்பதாயின், வேறு ஏதேனும் முறையை பயன்படுத்தி விளம்பர படுத்தியிருக்கலாம். ஆனால், ஒரு பாலியல் தொழிலாளியாக தொடர்பான படத்தின் காட்சியை, அதுவும் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகையின் வீடியோவை, பயன்படுத்தி விளம்பரப் படுத்தியது, கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.
இதை சீப் புரொமோஷன் என்று குறிப்பிட்டிருந்த இன்டெர்னெட் சமூகம், "நீங்கள் செய்திருக்கும் காரியத்தைக் கொஞ்சம் சரி பார்க்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட காட்சியின் பின் இருக்கும் வலிகளை மதிக்காமல், உங்கள் தேவைக்காக அதைப் பயன்படுத்தியுள்ளது, உங்கள் அறியாமையையும், பெண்ணடிமைத்தன சிந்தனையையும் குறிக்கிறது" என்று குரலெழுப்பியிருந்தது
இன்னொரு பயனர், "இதைய் நீங்கள் உங்கள் வியாபார யுக்தியாக நினைத்து பயன்படுத்தியிருந்தால், உங்கள் பார்வையில் தவறிருக்கிறது. பாலியல் தொழில் செய்வோரின் படத்தைப் பயன்படுத்தி, அதுவும் நிஜத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணை குறிப்பிட்டு உங்கள் வாடிக்கையாளர்களைக் கவர நினைத்திருப்பது உங்கள் தரம் எவ்வளவு கீழே உள்ளதென்றும், மனம் எவ்வளவு ஆழமற்றது என்றும் தெரிவிக்கிறது" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்விங் உணவகம், "இந்த திரைப்படம், மற்றும் இந்த பதிவு ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
எப்போதும் போலவே உங்களுக்கும் அதே அன்போடு சேவை செய்வோம். நாங்கள் எவரின் உணர்ச்சியையும் புண்படுத்தும் நோக்கத்தோடு இதை செய்யவில்லை" என்று குறிப்பிட்டது. மேலும் "படத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் பாராட்டு, உணவகம் பயன்படுத்தினால் பாவமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தது.
எனினும், இந்த விளம்பரத்தின் பயன்பாட்டுக்கு எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust