பாம்பு Twitter
Viral Corner

கோழி முட்டை என நினைத்து golf ball ஐ விழுங்கிய பாம்பு - என்ன நடந்தது தெரியுமா?

Antony Ajay R

அமெரிக்காவில் உள்ள வடக்கு கொலராடோ வனவிலங்கு மையத்துக்கு வந்த அழைப்பில், ஒரு பாம்பு முட்டை என நினைத்து இரண்டு கோல்ஃப் பந்துகளை விழுங்கிவிட்டு வேலியோரம் செய்வதறியாது தவித்துக் கிடப்பதாக தகவல் வந்துள்ளது.

பாம்பின் தொண்டையில் சிக்கிய பந்துகளை மீட்க முடிந்ததா? இது குறித்து அந்த விலங்கு மீட்பு அமைப்பு தங்களது விரிவான பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறது.

அந்த பதிவில், இது மிக அரிதான ஒன்று எனவும் அந்த பாம்பு பந்துகளை தவறுதலாக விழுங்கியிருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் பாம்பின் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர்.

அந்த பந்துகள் பாம்பின் குடலில் அடைப்பை ஏற்படுத்தியது. இது மிகத் தீவிரமான பிரச்னை என்று அந்த அமைப்புக் கூறியுள்ளது.

பாம்பினைப் பிடித்த மீட்பு குழுவினர் சில கருவிகளைப் பயன்படுத்தி அதன் தொண்டையிலிருந்து பந்தை வெளியில் எடுத்திருக்கின்றனர்.

துரிதமாக செயல்பட்டு பந்தினை வெளியில் எடுத்ததால் ஆபரேஷன் எதுவும் செய்யாமலே பாம்பைக் காப்பாற்ற முடிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோல்ஃப் பந்துகளை எடுத்த பின்னர் பசியிலிருந்த பாம்புக்கு மீட்புக் குழுவினர் உணவளித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?