The Girlfriend Effect: காதலி வந்த பின்னர் ஆண்களின் நடை, உடை, பாவனை மாறுகிறதா?
The Girlfriend Effect: காதலி வந்த பின்னர் ஆண்களின் நடை, உடை, பாவனை மாறுகிறதா? Twitter
Viral Corner

The Girlfriend Effect: காதலி வந்த பின்னர் ஆண்களின் நடை, உடை, பாவனை மாறுகிறதா?

Antony Ajay R

சமூக வலைதளங்களில் தினம்தோறும் பல ட்ரெண்ட்கள் உருவாகின்றன. அடுத்த ட்ரெண்ட் வரும் வரை பயனர்கள் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட வகையான வீடியோவைப் பயன்படுத்தி வீடியோக்களைப் பதிவிடுவர்.

அப்படி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் சமுக வலைதளத்தில் ஒரு ட்ரெண்ட் உருவாகியிருக்கிறது. பெண்கள் வருகைக்கு பிறகு தங்களது காதலர் (ஆண்கள்) எந்த அளவு மாறியிருக்கிறார் என்பதை எடுத்துக்கூறும் விதமாக வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதேப் போன்ற வீடியோக்கள் நம் இளைஞர்கள் மத்தியிலும் "Who She Met vs Who She Made" என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. (வீடியோ உதாரணத்துக்காக மட்டுமே)

இந்த ட்ரெண்டை "Girlfriend Effect" அல்லது "Girlfriend Air" என அழைக்கின்றனர். ஆண்கள் காதலிக்கத் தொடங்குவதற்கு முன்னர் சரியான உடை அணியாமல், ஏனோதானோ என இருப்பதையும் காதலிக்கத்தொடங்கியதும் ஸ்டைலிஷாக மாறிவிடுவதாகவும் இந்த வீடியோக்கள் கூறுகின்றன.

சில நாட்களுக்கு முன்னர் இதற்கு நேர்மாறாக பெண்கள் தங்களுடைய ஆண் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும்போது அவர்களின் தோற்றம் கவர்ச்சியற்றதாக மாறிவிடுகிறது என Boyfriend Effect ட்ரெண்ட் உருவானது. ஆனால் அதைவிட இந்த புதிய ட்ரெண்ட் அதிகமாக பகிரப்படுவதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

காதலிகள் தங்களது காதலர்களின் ஆடைத் தேர்வில் பெரிய உதவியாக இருக்கின்றனர். எப்படி ஸ்டைலாக உடையணிவது எனக் கற்றுக்கொடுக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

Girlfriend Effect-ல் வைரலாகும் வீடியோக்களை X தளத்திலும் சிலர் பதிவேற்றம் செய்து தங்களது கருத்துக்களைக் கூறிவருகின்றனர். "கேர்ள் பிரெண்ட் எஃபெக்ட் எனக்கு மிகவும் பிடித்த TikTok ட்ரெண்ட், ஏனென்றால் ஆண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று இறுதியாக தெரிந்து கொள்கிறார்களே" என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

உங்கள் வாழ்க்கையிலும் இந்த Effect ஏற்பட்டிருக்கிறதா? அல்லது காதலி வந்த பிறகு உங்கள் நண்பர்களின் நடை, உடை, பாவனைகளில் மாற்றத்தை கவனிக்கிறீர்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?