Music band Twitter
Viral Corner

Band வாத்தியத்திற்கு யார் பணம் கொடுப்பது? - திருமணத்தை நிறுத்திய மணமகன்

திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேண்ட் வாத்தியத்திற்கு யார் கட்டணம் செலுத்துவது என்று ஏற்பட்ட தகராறால் கோபமான மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

Priyadharshini R

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக பரூக்காபாத்தில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியம் எனப்படும் இசைக்குழு ஒன்றை தர்மேந்திரா அழைத்து வந்தார்.

Marriage

திருமணத்தின் போது இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய இசைக்குழுவினர் பணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து மணமகள் வீட்டில்தான் பணம் தரவேண்டும் என்று மணமகன் வீட்டில் கூறி உள்ளனர்.

இதற்கு மணமகள் தரப்பினர் தாங்கள் இசைக்குழுவை வரவழைக்கவில்லை எனக்கூறி, இசைக்குழுவினருக்குப் பணம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

Marriage

இதனால் திருமண நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த மணமகன் தனது கௌரவத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறி மணமேடையில் இருந்து வெளியேறினார்.

பேண்ட் வாத்திய குழுவினருக்கான யார் பணம் கொடுப்பது என்று ஏற்பட்ட தகராறால் திருமணமே நின்றுபோன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?