Giant Pythons  Twitter
Viral Corner

Giant Python : இரண்டு பெரிய பாம்புகளை சுமந்து நடனம் ஆடும் வாலிபர் - வைரல் வீடியோ

இந்தோனேசியாவில் வாலிபர் தனது தோளில் இரண்டு பெரிய பாம்புகளை சுமந்து நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Priyadharshini R

ஸ்மார்ட் போன் சூழ்ந்த நவீன உலகில் பல்வேறு விசித்திரமான சம்பவங்களை இணையத்தின் வழியே அறிந்துகொள்ளலாம். இவை சில சமயங்களில் வைரலாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தோனேசியா நாட்டில் வாலிபர் ஒருவர் தனது இரு தோளில் பைத்தான் இன பாம்புகளை தொங்க விட்டு நடனம் ஆடியுள்ளார்.

உலகிலேயே மிகப் பெரிய பாம்புகளாகக் கூறப்படும் பைத்தான் வகை பாம்புகள் 20 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டவை. இவை விஷமற்றவை என்றாலும், தனது எடையை விடப் பெரிய எடை கொண்ட விலங்குகளையும் இரையாக்கக் கூடிய திறன் படைத்தவை. சில சமயங்களில் மனிதர்களையும் விழுங்கி விடும்.

ஆனால் அந்த வாலிபர் அசால்ட்டாக தனது தோளில் 20 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட பாம்புகளை தொங்க விட்டு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் பல்வேறு கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதிகள், இந்தியா, நேபாளம், வங்காள தேசம், இலங்கை, தென்கிழக்கு ஆசியா, தென்கிழக்கு பாகிஸ்தான், தெற்கு சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த வகை பாம்புகள் அதிகம் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?