நதானியேல் நோலன் என்ற 31 வயது நபர் தினமும் நாய் போல நடப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
கடந்த ஒரு வருடமாக அவர் இந்த பழக்கத்தைக் கொண்டுள்ளார். நான்கு கால்களில் ஊர்ந்து செல்வதுப் போல நடக்கவும் ஓடவும் செய்கிறார்.
வீட்டிலும், சாலையிலும், புல்வெளிகளிலும், பொது இடங்களிலும் அவர் இது போன்று நடந்துக் கொள்கிறார். தினசரி குறைந்தது ஒரு மணிநேரம் அவர் இதனைச் செய்கிறார்.
ஃபிட்னஸ் ட்ரெய்னரான அவர், தினமும் இதனைப் பயிற்சி செய்வதுடன் ஜிம்முக்கு செல்பவர்கள் அனைவரும் இதனைப் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
நதானியேல் அதி தீவிரமான உடல் பயிற்சிகளை செய்த போது அதிக மூட்டு வலியை உணர்ந்ததாகவும் இதை செய்வதனால் அவரது உடல் அதிக இலகுத்தன்மைக் கொண்டதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது கைகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தாத சிறந்த பயிற்சி என்று அவர் கூறுகிறார்.
"இந்த நான்கு கால்களில் நடக்கும் பயிற்சியை நான் தான் கண்டறிந்தேன். இதற்கு முன்னர் யாரும் இப்படிச் செய்து நான் பார்த்ததில்லை." என்கிறார் நதானியேல்.
இதனைச் செய்யும் போது பொது வெளியில் யாரும் தன்னை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை என்கிறார் அவர்.
"நீங்கள் ஒரு பார்கில் இப்படிச் செய்தான் யாருமே உங்களைக் கண்டுகொள்ளப்போவதில்லை. மற்றவர்களுக்காக இதனை செய்யாமல் இருக்கக் கூடாது" எனவும் அவர் கூறினார்.
"மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் நீங்கள் வாழ நினைத்தால் அது உங்களை நீங்களே சிறிய பெட்டியில் அடைத்துக்கொள்வது போல" என்றார் அவர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust