Pan Canva
Viral Corner

Pan Slapping Contest: பேனை வைத்து மாறி மாறி அடித்துக்கொள்ளும் போட்டி- வைரல் வீடியோ

Keerthanaa R

விசித்திரமான, சிரிக்கவைக்கக்கூடிய நிறைய போட்டிகள் உலகம் முழுவதும் நடைபெறும். நீளமான, விசித்திரமான நகம், செல் ஃபோன் தூக்கி எறியும் போட்டி, ஹை ஹீல் ரேஸ் என வினோதமான பல போட்டிகள் இதில் அடங்கும்.

அந்த வகையில், இணையதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிலும் அப்படி ஒரு விசித்திர போட்டி தான் நடக்கிறது.

அந்த வீடியோவில் இருவர் படை வீரர்கள் அணிந்திருக்கும் இரும்பு ஹெல்மெட்டை அணிந்து உட்கார்ந்திருக்கிறார்கள். கையில் நாம் சமைக்க பயன்படுத்தும் Pan இருக்கிறது. போட்டி துவங்கியவுடன், இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். ஒரு பேனை பயன்படுத்தி தான் இருவரும் அடித்துக்கொள்ளவேண்டும். இந்த அடிகளை வாங்கி முதலில் யார் கீழே விழுகிறார்களோ, அவர் இப்போட்டியில் தோற்றுவிடுவார். அடிகளை தாங்கி நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார்

கிட்ட தட்ட 2 மில்லியன் வியூக்களை கடந்துள்ள இந்த வீடியோ இன்னும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது . இதற்கு ஒரு பயனர், "வேற்றுகிரக வாசிகள் பூமியை வந்தடைந்ததும் பார்க்கும் முதல் விஷயம் இதுவாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று கமென்ட் செய்திருந்தார்.


இந்த வீடியோவை NBA வீரரான ரெக்ஸ் சேப்மேன் தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இதேபோன்று பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் அர்னால்ட் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவலில், "Slap Fighting Chamoionship" நடத்தப்பட்டது. மேலும், தலையணை வைத்து "Pillow Fighting Champiosnhip" நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?