Pre Wedding Photoshoot  Twitter
Viral Corner

தீயைப் பற்றவைத்து Pre Wedding Photoshoot நடத்திய ஸ்டண்ட் கலைஞர்கள் - வைரல் வீடியோ

Priyadharshini R

நினைவுகளைச் சேகரித்து வைக்கும் ஒரு டூலாக புகைப்படங்கள் விளங்குகின்றன. போட்டோகிராபியை தற்போது செல்ஃபி காலமாக மாற்றிவிட்டனர் இன்றைய தலைமுறை. முந்தைய கால திருமணங்களில் புகைப்படங்களே இருக்காது. ஆனால், 1990-களில் நடந்த பெரும்பாலான திருமணங்களில் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இயற்கைக் காட்சிகள் அருகே மணமக்கள் நிற்பது, கைகளைப் பிடித்துக் கொண்டு மணமக்கள் நிற்பது, மணமகனைப் பார்த்து மணமகள் ரசிப்பது என அடுத்தடுத்த ஆண்டுகளில் திருமணப் புகைப்படங்கள் வளர்ச்சி அடைந்து Pre Wedding Photoshoot, post wedding photoshoot எனப் புகைப்பட கலைஞர்கள் அசத்தி வருகின்றனர்.

திருமணத்தின் போது எடுக்கப்படும் சாதாரண புகைப்படங்கள் மற்றும் கேண்டிட் புகைப்படங்கள் தவிர, திருமணத்துக்கு பிந்தைய போட்டோஷூட்டான கடலில் இருந்து ஓடி வருவது, மணமகளை அலேக்காக தூக்குவது என போஸ் கொடுக்க வைத்து புகைப்படங்களை ஃபோட்டோகிராபர் சலிக்காமல் எடுத்து வருகின்றனர். இதனால், திருமணத்தின் போது வித, விதமான புகைப்படங்களை எடுக்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில் காதல் ஜோடிகளான ஸ்டண்ட் கலைஞர்கள் இருவரும் வித்தியாசமான முறையில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர் என்ற இருவரும் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்தித்து காதலில் விழுந்தனர். இந்நிலையில் தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இப்படி தான் நடத்த வேண்டும் என்று ரூம் போட்டு யோசித்துள்ளனர்.

அதன்படி மணமக்கள் தங்கள் முதுகின் பின்புறம் தீயைப் பற்றவைத்துக் கொண்டு வேகமாக நடந்து வருகின்றனர். அப்போது வந்திருந்த விருந்தினர்கள் கைகளைத் தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர். கொழுந்து விட்டு எரியும் தீயிற்கிடையே ஜோடியாக மணமக்கள் ஹாயாக நடந்து வருகின்றனர்.பின்னர் தீயை அணைக்கும் கருவிகளைக் வைத்து இருவருக்கும் தீயை அணைத்தனர்.

இதனைத் திருமண புகைப்படக்காரர் ரஸ் பவல் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?