படித்து முடித்த பின் வேலை கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. படித்துமுடித்த கையுடன் எல்லோருக்கும் வேலைக் கிடைத்துவிடாது. இன்டெர்வியூவிற்கு கம்பெனி கம்பனியாக ஏறி இறங்க வேண்டும்.
அது தற்போது சற்று வேறு விதமாக மாறியுள்ளதே தவிர, வேலை தேடும் படலமோ இன்னும் பலருக்கு ஓய்ந்தபாடில்லை. முன்னர் நேரில் சென்று வேலைத் தேடிக்கொண்டிருந்த நாம் இப்போது இணையம் மூலமாகத் தேடுகிறோம். நிறுவனங்கள் நம் விண்ணப்பத்தைப் பார்த்து வரச் சொன்னால் தான் நேர்காணலே.
மாறிவரும் இந்த பழக்கத்திற்கு இணையாக நமக்கு இந்த மீம் பழக்கமும் அதிகரித்துள்ளது தவிர்க்கமுடியாத உண்மை. நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு ஒரு மீம் இருக்கும்.
இந்த மீம்களின் மூலம் பலரது வாழ்க்கை திருப்பங்களைப் பெற்றுள்ளது. சிலவை நகைச்சுவையான ஒன்றாக இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இந்த பெண்ணின் கதையும்.
நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், நம் அப்ளிகேஷனை நிராகரித்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன செய்வோம்? சோர்வடைவோம் அல்லது மற்றொரு நிறுவனத்திற்கு ரெஸ்யூம் அனுப்புவோம். ஆனால் இங்கு ஒரு பெண் நிராகரித்த ரெஸ்யூமை, பார்த்து மீண்டும் அழைக்க வேண்டும் என்பதற்காக ஒரு யோசனையை செயல்படுத்தியுள்ளார்.
ஸ்வீடிஷ் ஸ்வான் என்ற பெயரில் டிக் டாக் பயனர் ஒருவர் வேலைக் கேட்டு ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். அவர்களிடம் இருந்து, பதில் வந்துள்ளது. அதில் அவர்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்வதாகவும், இவரது விண்ணப்பத்தை அவர்கள் ஏற்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
"நான் காலை விழித்ததும் விண்ணப்பித்திருந்த நிறுவனத்திலிருந்து ஒரு ரெஜெக்ஷன் லெட்டரை தான் பார்த்தேன். நான் இந்த வேலை கிடைக்கும் என்று கொஞ்சம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்"
இதனால் என்ன செய்வதென்று யோசித்துள்ளார் அந்த பெண். "இந்த தலைமுறையினரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டதை வைத்து, அவர்களுக்கு பதிலுக்கு இந்த மீமை அனுப்பினேன்" என்றார். அந்த பெண் அந்நிறுவனத்திற்கு அனுப்பியது போப் லியோ X ன் ஓவியம் ஒன்று. அதில் கீழே "y tho" என்ற வாசகம் இருக்கும்.
இதை அவர் அந்த நிறுவனத்திற்கு அனுப்பியது தான். உடனே அந்த நிறுவனம் அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளது.
இந்த தகவலை அந்த பெண் பகிர்ந்ததும், இணைய வாசிகள் இவரை பாராட்டி வருகின்றனர். ஒருவர், "இதை நான் அளவுக்கடந்து விரும்புகிறேன். நீங்கள் தான் என் ஹீரோ" என்று ஒருவர் கமென்ட் செய்திருந்தார்.
"நான் இந்த வாரம் மட்டுமே பத்து விண்ணப்பங்களை அனுப்பியுள்ளேன். இந்த யுக்தியை நானும் கையாளப்போகிறேன்" என்றும் ஒருவர் கூறியிருந்தார்.
நேர்காணல் என்பது ஒரு மனிதரின் திறன், ஆளுமை, மற்றும் அவரது பெர்சனாலிட்டியை தெரிந்துகொள்வதற்காகவே ஆகும். அந்த வகையில் இவர் பாஸ் ஆகி இருக்கலாம்.
இந்த பெண்ணுக்கு வேலைக் கிடைக்க வாழ்த்துக்கள்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust