பூமிக்கு கீழ் உள்ள நீச்சல் குளம் முதல் பளிங்குகளின் தேவாலயம் வரை- வியக்க வைக்கும் தலங்கள்!
பூமிக்கு கீழ் உள்ள நீச்சல் குளம் முதல் பளிங்குகளின் தேவாலயம் வரை- வியக்க வைக்கும் தலங்கள்! Twitter
உலகம்

பூமிக்கு கீழ் உள்ள நீச்சல் குளம் முதல் பளிங்குகளின் தேவாலயம் வரை- wow spots!

Antony Ajay R

வழக்கமான சுற்றுலாத்தலங்களுக்கு சென்று அழுத்துவிட்டவர்களாகவோ அல்லது எந்த ஊருக்கு சென்றாலும் அதே மலையும் கடற்கரையும் தானே என நினைப்பவர்களுக்கோ ஏற்ற இடங்கள் இவை.

உண்மையிலே இப்படி ஒரு இடம் இருக்கிறதா என வாய்பிளக்க வைக்கும் மாயாஜாலமான இடங்களின் தொகுப்பு இது.

நாம் சிந்தனைக்கு எட்டாத அழகினை தன்னுள் மறைந்து வைத்திருக்கிறது இந்த பூமி.

அப்படிப்பட்ட 10 இடங்களைப் பார்க்கலாம்.

ப்ளிட்விஸ் ஏரிகள் தேசிய பூங்கா, குரோஷியா

இந்த இடத்துக்கு 1979ம் ஆண்டு யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் கிடைத்தது.

குரோஷியாவுக்கு பயணம் செல்ல விரும்பினால் நிச்சயமாக இந்த இடத்தைப் பார்வையிட வேண்டும்.

இயற்கையாகவே அந்த நாட்டுக்கு கிடைத்த அணிகலன் போல பார்க்கப்படுகிறது ப்ளிட்விஸ் ஏரிகள்.

இந்த அதியற்புதமான தலத்தில் 16 ஏரிகள் பல அருவிகளால் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அருவிகள் 300 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ளது.

பெனா தேசிய அரண்மனை, போர்ச்சுகல்

போர்சுகல்லின் முக்கிய நகரமான சின்தாராவில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.

பார்ப்பவர் கண்களைக் கவரும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலை பாணி மற்றும் தடித்த நிறங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சாட்டர்னியா ஹாட் ஸ்பிரிங்ஸ், இத்தாலி

இத்தாலியின் தஸ்கனியில் அமைந்திருக்கிறது இந்த மேஜிக்கல் நிலம்.

இந்த தண்ணீரை கடவுளின் பரிசு எனக் கூறுகின்றனர்.

இதன் உள்ளத்தை அள்ளும் அழகைத் தவிர்த்து இந்த தண்ணீருக்கு மருத்துவ குணங்களும் இருப்பதனால் மிகவும் பிரபலமான இடமாக இருக்கிறது.

மார்பிள் குகைகள், சிலி

6000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் அலைகள் மற்றும் உருகிய பனிக்கட்டிகளால் உருவானது இந்த மர்ம நிலம்.

இங்கு படகில் மட்டுமே செல்ல முடியும்.

இந்த இடம் பளிங்குகளின் தேவாலயம் என்று வழங்கப்படுகிறது.

பேயோன் கோயில், கம்போடியா

அங்கோர் வாட் கம்போடியாவில் 21 ஆம் நூற்றாண்டின் சுற்றுலாப் பயணிகளை காந்தம் போல ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது.

இங்கு இருக்கும் நூற்றுக்கணக்கான புத்தர் தலைகள் நம்மை மலைக்க வைப்பது உறுதி!

இன்றும் உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள் அங்கோர் வாட் கோவில் நகரத்தைப் பார்க்க வருகின்றனர்.

லேக் பிளெட், ஸ்லோவேனியா

ஸ்லோவேனியாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான ரொமான்டிக் சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்று லேக் பிளெட்.

அதிகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமும் இது தான்.

பிரம்மாண்டமான மலைகளுக்கு நடுவில் தெளிவான நீர் நிறைந்திருக்கும் அழகிய ஏரியும், உச்சியிலிருந்து அவற்றை பார்த்தபடி அமைந்திருக்கும் கோட்டையும் நம் கண்களுக்கும் உணர்வுகளுக்கும் விருதாக அமையும்.

ஐல் ஆஃப் ஸ்கை, ஸ்காட்லாந்து

கடலை ஒட்டியிருக்கு மலைகள் எப்போதுமே ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தும்.

அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று ஸ்காட்லாந்தில் உள்ள ஐல் ஆஃப் ஸ்லை.

இங்குள்ள தேவதைக் குளங்களில் குளித்து கடலைப் பார்த்தபடி அமர்ந்திருப்பது வாழ்தலின் உச்சம் எனலாம்.

Lauterbrunnen, சுவிட்சர்லாந்து

ஐரோப்பியாவின் அழகிய மலைத் தொடரான அல்ப்ஸ் மலைகளில் அமைந்திருக்கிறது Lauterbrunnen பள்ளத்தாக்கு.

இதனைச் சுற்றி 72 நீர் வீழ்ச்சிகள் இருக்கின்றன.

பெரிட்டோ மோரேனோ பனிப்பாறை, அர்ஜென்டினா

அர்ஜென்டினா ஏரியில் 60 அடி உயரத்துக்கு செங்குத்தாக அமைந்துள்ள பனிப்பாறைகள் நிச்சயம் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம்.

வெயில் காலத்தில் இந்த பனிக்கட்டிகள் உடைந்து மிதக்கும் காட்சிகளை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

Cenote Suytun, மெக்சிகோ

Cenote என்பது சுண்ணாம்பு பாறைகள் சரிவினால் உருவாகும் இயற்கையான குழிகளாகும்.

நிலத்துக்கு அடியில் மறைந்திருக்கும் இந்த கீழ் உலகத்தில் நிதானமாக நீந்துவதற்காக பலரும் இந்த இடத்தை தேர்வு செய்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?