சர்வதேச சுற்றுலா அல்லது வெளிநாட்டு சுற்றுலாப்பயணம் என்றால் மிகுந்த செலவு வைப்பது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.
இதனால் அது பற்றி பெரிதாக தெரிந்துகொள்வது கூட இல்லை. ஆனால், இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு நாம் சிக்கனமாகவே சென்று வர முடியும்.
அப்படிப்பட்ட 10 நாடுகளைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
இயற்கை அழகும் பண்பாட்டு செழிப்பும் மிக்க இந்த நாடுகள் எவை? அவற்றின் சிறப்புகள் என்ன? என்பதைத் தெரிந்துகொள்வோம்.
இந்திய ரூபாயை விட மதிப்பு குறைந்த நாணயங்களைக் கொண்ட நாடுகள் நிச்சயமாக நமக்கு மலிவானதாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு நாடு தான் கம்போடியா!
கம்போடியா வரலாற்றுச் சிறப்பு மிக்க தளங்களையும் அழகிய கடற்கரைகளையும் கொண்டிருக்கிறது.
பொலீவியா ஒரு தென்னமெரிக்க நாடாகும். சுற்றுலாவைப் பொருத்தவரையில் மற்ற தென்னமெரிக்க நாடுகளைப் போலவே பொலீவியாவும் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது.
இயற்கை அழகை ரசிப்பதுடன் Salar de Uyuni உப்பு நிலங்களைப் பார்வையிடலாம்.
அண்டை நாடான நேபாளத்தில் உலகின் மிக பெரிய சிகரமான எவரெஸ்ட் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினி இங்கு இருக்கிறது.
நேபாளத்தைத்தின் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதுடன் மலையேற்றம் போன்ற சாகங்களையும் இங்கு செய்யலாம்.
இந்தோனேசியாவின் பாலியை ஒரு சுற்றுலாத் தலைநகரம் என்றே கூறலாம்.
மிகப் பழமையான பாரம்பரிய தளங்களை இங்கு பார்க்கலாம்.
தண்ணீருக்கு அடியில் சுற்றிப்பார்ப்பதற்கும் இந்தோனேசியா சிறந்த நாடு. குறிப்பாக கபோபோஸ் தீவு இதற்கு சிறந்தது.
மங்கோலியாவின் பரந்த புல்வெளிகளை விட்டு வர யாருக்கும் மனம் வராது.
வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களும் தென் மங்கோலியாவில் விரிந்திருக்கும் கோபி பாலைவனமும் நிச்சயமாக பார்க்க வேண்டிய பகுதிகள்.
தவிர மங்கோலியாவில் உலகத் தரம் வாய்ந்த மியூசியங்களும், தேசியப் பூங்காக்களும் இருக்கின்றன.
இலங்கை அல்லது ஸ்ரீலங்கா ஆசியாவின் ரத்தினம் என்று அழைக்கப்படுகிறது.
அந்த அளவு அதிகமான இயற்கை வளங்களைப் பெற்றிருக்கிறது.
இங்கு உள்ள தேசியப் பூங்காக்களில் பலவகையான உயிரினங்களைப் பார்க்க முடியும்.
மேலும், அழகு மிகுந்த கடற்கரைகளிலும் ஓய்வு எடுக்கலாம்.
வியட்நாமிலும் அழகிய கடற்கரைகள் இருப்பது நாம் அறிந்தது தான்.
ஆனால் அதைவிட வியட்நாமின் கலாச்சாரமும் நம்மை கட்டி இழுக்கிறது.
வியட்நாம் சென்றால் மிதக்கும் ஹோட்டல்களை மிஸ் செய்யக் கூடாது!
தான்சானியா ஆப்ரிக்காவின் மிகப் பெரிய பூங்கா என்றே கூறலாம்.
உலகில் வேறெங்கிலும் பார்க்க முடியாத அழகிய நிலப்பரப்பினை இங்குக் காணலாம்.
புல்வெளிகள் முதல் வனப்பகுதிகள், பாறை வடிவங்கள் மற்றும் மலைச் சிகரங்கள் வரை பார்க்க பார்க்க சலிக்காத தனித்துவமான இடங்கள் தான்சானியாவில் இருக்கிறது.
மில்லியன் யானைகளின் நிலம் என்று அறியப்படும் லாவோஸ் யாருக்கும் தெரியாத சுற்றுலாத்தளமாகும்.
அற்புதமான இயற்கைக்காட்சிகள், தனித்துவமான கிராமங்கள், மக்கள் மற்றும் ஆராயப்படாத நிலப்பரப்புகளைப் பார்க்கலாம்.
டாட் ஃபேன் மற்றும் டோங் ஹுவா சாவோ உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் கண்கவர் நீர்வீழ்ச்சிகள் இங்கு மிகவும் பிரபலம்.
கிரிக்கெட் அணியைப் போலவே சுற்றுலாவிலும் வேகமாக வளர்ந்து வருகிறது ஜிம்பாப்வே.
தென்னாப்ரிக்கா நாடான இதன் நிலப்பரப்பின் இயற்கை செழிப்பு பல நாடுகளில் இருந்து பயணிகளை ஈர்க்கிறது.
நேரடியாக காடுகளுக்கு சென்று விலங்குகளைப் பார்வையிட விரும்புபவர்கள் நிச்சயமாக இங்கு செல்ல வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust