முதல் Newyear 2023 ஆண்டுகளுக்கு முன் கொண்டாடப்படவில்லை - 10 சுவாரஸ்ய தகவல்கள்! Newssense
உலகம்

முதல் Newyear 2023 ஆண்டுகளுக்கு முன் கொண்டாடப்படவில்லை - 7 சுவாரஸ்ய தகவல்கள்!

Antony Ajay R

உலகில் உள்ள எல்லா மதத்தவரும் மொழியினரும் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களும் கொண்டாடும் ஒரு நாள் புத்தாண்டு.

1 ஜனவரி என்பது வெறும் காலாண்டரை மாற்றுவது மட்டுமில்லை வாழ்க்கையில் புதிய தொடக்கங்களை மேற்கொள்வதற்காகன, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான நாள்.

எல்லா விழாக்களையும் கொண்டாடும் போது அதன் பின்னால் இருக்கும் கலாச்சார புதிரை அவிழ்க்கும் ஆர்வம் நமக்கு இருக்கும். ஆனால் புத்தாண்டு ஒரு வருடத்தின் தொடக்கம் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். உண்மையில் புத்தாண்டின் பின்னணியிலும் சில சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கிறது.

  • நாம் 2023ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாடிக் கொண்டிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டடங்கள் தொடங்கி 2023 ஆண்டுகள் தான் ஆகிறது என நினைக்கிறோம். ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனிய மக்கள் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர்.

  • ரோம் பேரரசர் ஜூலியஸ் சீசர் முதன் முதலாக ஜனவரி 1ம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவித்தார்.

  • நியூ இயரில் தான் அதிகமாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுகிறதாம்.

  • உலகம் முழுவதும் அதிகமாக மக்கள் எடுத்துக்கொள்ளும் நியூ இயர் ரெசெலூஷன் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது தானாம்.

  • புத்தாண்டு முதன்முதலில் சாமாவோ, கிறிஸ்மஸ் தீவு பகுதிகளில் பிறக்கும். கடைசியாக மனிதர்கள் வசிக்காத பேக்கர்ஸ் மற்றும் ஹோவார்ட் தீவுகளில் முடிவடைகிறது.

  • பண்டைய ரோமானிய பேரரசில் மார்ச் 1ம் தேதியை நியூ இயராக கொண்டாடினர்.

  • புத்தாண்டை கொண்டாடாத ஒரே நாடு எத்தியோப்பியா மட்டும் தான். அங்கு ஒரு வருடத்துக்கு 13 மாதங்கள். இப்போது அங்கு 2015ம் ஆண்டு தான் நடந்துகொண்டிருக்கிறது.

எத்தியோப்பியா : இந்த நாட்டில் இப்போது தான் 2015 ஆம் ஆண்டு ஆகிறது - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?