Travel News Sense
உலகம்

உலக சுற்றுலா : இந்தியாவிலிருந்து இந்த 10 நாடுகளுக்கு நீங்கள் பைக் ரைட் செய்யலாம்

சுதந்திர பறவையாகப் பறக்க ஒரு பைக் பயணம் தான் சரி என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி பைக் பயணம் செல்பவர்கள் இந்தியாவிலிருந்து சாலை மார்க்கமாக செல்ல முடியக் கூடிய நாடுகளின் பட்டியலைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

Antony Ajay R

ஒரு பயணத்தை மேற்கொள்ளப் பல வழிகள் உண்டு. சாலை, கடல், வான் என எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஒரு ட்ராவல் ஏஜென்சியில் சிக்கி அவர்களின் வழிகாட்டுதல்களுக்குக் கட்டுப்பட்டு சொன்ன திசை செல்லும் பழக்கம் ஒரு வேளை உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம். சுதந்திர பறவையாகப் பறக்க ஒரு பைக் பயணம் தான் சரி என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி பைக் பயணம் செல்பவர்கள் இந்தியாவிலிருந்து சாலை மார்க்கமாக செல்ல முடியக் கூடிய நாடுகளின் பட்டியலைத் தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

Nepal

நேபாளம் (Nepal)

தொலைவு : 1,748 km (சென்னையிலிருந்து)

இரண்டு நாட்களுக்குள் சென்றுவிட முடியும் (34 மணிநேர பயணம்). வழியில் இருக்கும் இடங்களைப் பார்வையிட்டும் செல்லலாம். பெட்ரோல் தவிர்த்து நேபாளத்தில் ஆகும் செலவு குறைவுதான். இந்தியாவில் எடுக்கும் லைசென்ஸிலேயே பயணிக்கலாம்.

China

சீனா

தொலைவு : 4619 கிலோமீட்டர்

சீனா மிகப் பெரிய நாடு. 6 நாட்களில் பயணிக்க முடியும். நேபாளம் வழியாக பயணிப்பது எளிதான வழி. சீனப் பெருஞ்சுவர் மட்டுமல்ல சீனாவில் பார்க்க பல இடங்கள் உள்ளது. இந்திய லைசன்ஸே பயன்படுத்த முடியும்.

Uzbekistan

உஸ்பெகிஸ்தான்

தொலைவு : 3516 கிலொமீட்டர்

சார்வாக் ஏரி உள்ளிட்ட தாஷ்கண்ட் நகரின் பல சுற்றுலாத்தலங்கள்.கிவாவின் சுவர் நகரம் உள்ளிட்ட கலைநயமிக்க கட்டடங்கள், அய்டர்குல் ஏரி போன்ற இயற்கை காட்சிகள் என நிறைந்திருக்கும் உஸ்பெகிஸ்தானை காண கண்கோடி வேண்டும். இங்கு பைக்கில் பயணிக்க அனுமதி பெற வேண்டும்.

Bangladesh

பங்களாதேஷ்

தொலைவு : 1,972

மூன்று நாட்கள் வரை பயணிக்க வேண்டும். ஒரு பங்களாதேஷ் நிலப்பரப்பின் அழகை ரசித்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவத்தை பங்களாதேஷ் கொடுக்கும்.

Thailand

தாய்லாந்து

தொலைவு : 5000 கிலோமீட்டர்

மிக அதிகமான தூரம் பயணிப்பதை விரும்புபவர்கள் மட்டுமே இந்த தொலைவு பயணத்தை மேற்கொள்ள முடியும். வழியில் பாங்காங் மற்றும் மியான்மரை தாண்டி பயணிக்க வேண்டியது இருக்கும். அந்த நாடுகளிலும் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருப்பதனால் அனைத்து நாடுகளுக்கும் ஒரே பயணமாக திட்டமிடலாம்.

Singapore

சிங்கப்பூர்

தொலைவு: 6700 கிலோ மீட்டர்

மியான்மர், தாய்லாந்து மலேசியா ஆகிய சுற்றுலாத்தலங்கள் நிறைந்த நாடுகளை கடந்தே சிங்கப்பூர் வந்தடைய முடியும். இங்கு தமிழர்கள் அதிகம். இந்திய லைசன்ஸையே பயன்படுத்த முடியும்.

Vietnam

வியட்நாம்

தொலைவு : 6000 கிலோ மீட்டர்

இங்கும் பல நாடுகளை கடந்து செல்ல வேண்டியது இருக்கும். குளிர்காலத்தில் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அள்ளும்.30 நாட்களுக்கான இ-விசா அப்ளை செய்து கூட போக முடியும்.

துருக்கி

துருக்கி

தொலைவு : 5300 கிலோ மீட்டர்

துருக்கி அரபு நாடுகளில் அழகான நாடு என்று துருக்கியை கூறலாம். 6,7 நாள் பயணத்தில் துருக்கியை அடைய முடியும்.

Greece

கிரீஸ்

தொலைவு : 9555 கிலோமீட்டர்

கிரீஸ் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடு. துருக்கி உள்ளிட்ட நாடுகளை கடந்து சென்று கிரீஸின் அழகை ரசிக்கலாம்.

London

இங்கிலாந்து

தொலைவு : 8 500

படங்களில் பார்த்தது போல லண்டன் நகரிலொரு படகு சவாரி செல்லுவது அனைவருக்கும் ஆசையான ஒன்று. இரண்டு வாரம் வரை பயணித்து லண்டனை அடைய வேண்டியதிருக்கும். கோடைக்கால சுற்றுலாவுக்கு ஏற்ற நகரம் லண்டன். போலந்து, பெலாரஸ். ஜெர்மனி, ரஷ்யா, நெதர்லாந்து பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் ஒரே ட்ரிப்பில் சுற்றிப்பார்ப்பது நல்லது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?