டைட்டானிக் என்ற பெயர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம் காதுகளில் மரண ஓலத்தை ஒலிக்கச்செய்யுமோ தெரியவில்லை.
உலகின் முதல் மிகப் பெரிய நீராவி பயணிகள் கப்பலான டைட்டானிக், தயாரிக்கப்பட்டு முதற்பயணம் மேற்கொண்ட ஆண்டே விபத்தில் சிக்கி ஆயிரம் உயிர்களை பலி வாங்கியது.
இது தற்போது வரை உலகின் மிகப் பெரிய விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனை மையமாக வைத்து 1997ல் ஹாலிவுட்டில் திரைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது.
டைட்டானிக் கப்பல் விபத்துக்கு பிறகு, சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டு சில ஆண்டுகளில் இது ஒரு முக்கிய சுற்றுலா புள்ளியாக மாறியது. அதாவது சிதைந்த கப்பலைக் காண பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதனை ஒருங்கிணைக்கும் நிறுவனங்களில் அமெரிக்காவின் ஓஷன்கேட் நிறுவனமும் ஒன்று. ஓஷன்கேட் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 5 பேரை ஏற்றிக்கொண்டு நீர்மூழ்கி கப்பல் ஒன்று புறப்பட்டது. இதில் ஒரு பைலட், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் மீதமுள்ள மூன்று பேர் பயணிகளாவர்.
இந்த நீர்முழ்கி கப்பலானது பயணத்தை தொடங்கிய 2 மணி நேரத்துக்கு உள்ளாகவே அதனுடனான தகவல் தொடர்பு துண்டித்துள்ளது. இதனையடுத்து தொலைந்த நீர்மூழ்கியை கடந்த நான்கு நாட்களாக தேடிவந்த நிலையில், நேற்று இரவு கப்பல் வெடித்து சிதறி, பயணித்த ஐவரும் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டைட்டானிக் கப்பல் விபத்துக்கு உள்ளாகி 111 ஆண்டுகள் ஆகியும் அதன் சாபக்கேடு தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.
அப்படி இந்த டைட்டானிக் கப்பலில் என்ன இருக்கிறது? அதன் அறியப்படாத மர்மங்கள் என்ன?
ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்று சிறு குழந்தையை கேட்டாலும் தெரியும். ஆனால், அவரும் டைட்டானிக் பயணிகளில் ஒருவர் தான்!
ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அவர் அந்த கப்பலில் பயணிக்கவில்லை. பயணிக்கவிருந்தார். டைட்டானிக் பயணத்தை தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன் லூசிதானா என்ற கப்பலில் அவர் பயணத்தை மேற்கொண்டு விட்டார்.
டைட்டானிக் கப்பல் விபத்தில் கடைசியாக உயிரிழந்த பெண் மில்வினா டீன். விபத்தின் போது இவர் 2 மாதக் குழந்தையாக இருந்தார். பிரிட்டனின் அரசு ஊழியராக இருந்தார். இவர் ஒரு கார்ட்டோகிராஃபர். அதாவது வரைபடவியலாளர்.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தனது 97வது வயதில் காலமானார்.
சவுதாம்ப்டன் பகுதிக்கு அருகில் இருந்த நார்தம் பகுதியை சேர்ந்தவர்கள் தான் இந்த கப்பலில் அதிக எண்ணிக்கையில் பயணித்ததாக அப்போதைய பத்திரிகை தகவல் கூறுகிறது. அதன் படி, விபத்தில் மரணித்த 686 ஊழியர்களில் பெரும்பாலானோர் இந்த நார்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாம்.
அந்த கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்த 240 மாணவர்களில் சுமார் 120 பேரின் தந்தையர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
திருமணம், அது முடிந்த கையோடு தேன் நிலவு செல்வது எவ்வளவு சந்தோஷமான நிகழ்வு? ஆனால், இந்த கப்பலில் பயணித்த 13 ஜோடிகளுக்கு நிலை வேறு. டைட்டானிக் பயணிகளில் 13 தேன் நிலவு ஜோடிகள் பயணித்தனராம். அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.
டைட்டானிக்கில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் பெரும் பணக்காரர்கள். அவர்களில் ஜேக்கப் அஸ்டர் என்பவரும் ஒருவர். இவர் அந்த காலத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் ஆவார்.
தன் மனைவியோடு தேன் நிலவுக்கு டைட்டானிக்கில் பயணம் மேற்கொண்டார். இவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
அந்த 13 தேன் நிலவு ஜோடிகளில் இவர்களும் ஒரு ஜோடி.
சமயத்தில், ஒரு விஷயம் நாம் செய்யத் தொடங்கும்போது ஏற்படும் தடங்கல்கள், பின்னர் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு பெரிய நிகழ்வுக்கான எச்சரிக்கை மணியாக இருக்கும்.
அப்படி இந்த டைட்டானிக் கப்பல் கட்டுமானத்தின் போதே 8 பேர் உயிரிழந்துள்ளனர்!
இது போன்ற பெரிய கப்பல்களில் நாம் செல்லும் வழியை கண்காணிக்க பைனாக்குலர் அறை, அங்கு பொறுப்பில் ஊழியர்கள் இருப்பார்கள். இவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
அப்போது கடைசியாக ஊழியர் ஒருவர் பொறுப்பேற்ற சமயத்தில் பைனாக்குலர் அறையின் சாவி கிடைக்காமல் போயிருக்கிறது
டைட்டானிக் கப்பலில் இசைக்குழுவினரும் பயணித்தனர் என்பது நமக்கு தெரியும். கப்பல் விபத்துக்குள்ளான போதிலும் இந்த இசைக்கலைஞர்கள் வாசிப்பதை நிறுத்தவே இல்லையாம்.
டைட்டனிக்கில் பயணித்த 2200 பேரில் 1500 பேர் உயிரிழந்தனர். 700 பேர் தப்பிப்பிழைத்தனர். ஆனால் அவர்களிலும் ராஜர் பிரிகோக்ஸ் என்ற இசைக்கலைஞர் மட்டும் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
செல்லொ இசைக்கலைஞரான இவரது உடல் கிடைக்கவே இல்லை. இதனால் இவர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் எங்காவது சிக்கியுள்ளாரா என்பது அறிவிக்கபடாமலேயே இருந்தது.
இவரை டெசர்ட்டர் என்று அறிவித்தனர். அதன் பிறகு 2000மாம் ஆண்டு பிரான்ஸ் டைட்டானிக் அசோசியேஷன் இவர் இறந்துவிட்டதாக அறிவித்தது.
ஆனால் இது இன்னும் மர்மமாகவே உள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust