இந்தோனேசியாவில் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு 54 வயது பெண்ணை முழுவதுமாக விழுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்பி மாகாணத்தில் ஜஹ்ரா என்ற பெண் தனது வீட்டு அருகே உள்ள ரப்பர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாத நிலையில்
தேடுதல் தொடங்கப்பட்டதாக CNN இந்தோனேசியாவிடம் போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அப்பகுதியில் தேடியபோது அவரது செருப்பு, தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் கத்தி மட்டுமே கிடைத்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அடுத்த நாள், அவரும் ஒரு தேடுதல் குழுவினரும் அதே பகுதிக்குத் திரும்பினர், அங்கு அவர்கள் வீங்கிய நடுப்பகுதியுடன் ராட்சத பாம்பைக் கண்டனர்.
கிராம மக்கள் மலைப்பாம்பு தான் அந்த பெண்ணை விழுங்கிருக்க வேண்டும் என்றனர்.
உள்ளூர் டெர்ஜுன் கஜா கிராமத்தின் தலைவர் ஆண்டோ கூறுகையில் "நாங்கள் தேடிக்கொண்டிருந்த பெண் பாம்பின் வயிற்றில் இருந்தது பின்னர் தெரியவந்தது."
மலைப்பாம்பு ஜஹ்ராவைக் கடித்திருக்கலாம், அவளை விழுங்குவதற்கு முன்பு அவளைச் சுற்றியிருக்கலாம் என்று ஆண்டோ கூறினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust