5 most expensive coffees in the world Twitter
உலகம்

உலகின் மிக விலையுயர்ந்த காபி எது தெரியுமா? ஏன்?

இந்த காபிகளுக்கான விலைகள் பரவலாக மாறுபடும், சில காபிகள் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படுகின்றன. அப்படி உலகின் மிக விலையுயர்ந்த காபி குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

Priyadharshini R

உலகம் முழுவதும் ஏராளமான காபி பிரியர்கள் உள்ளனர். பல வகை காபிகள் இருந்தாலும், உலகிl மிக விலையுயர்ந்த காபி வகைகளும் உள்ளன. இவை நினைத்து பார்க்க முடியாத அளவு விலை உயர்ந்ததாக இருக்கிறது.

அந்த காபிகள் தனித்துவமான உற்பத்தி முறைகள், கவர்ச்சியான தோற்றம் , அதன் சுவைதன்மை ஆகியவற்றிக்காக விலை உயர்ந்ததாக இருக்கிறது.

இந்த காபிகளுக்கான விலைகள் பரவலாக மாறுபடும், சில காபிகள் ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படுகின்றன. அப்படி உலகின் மிக விலையுயர்ந்த காபி குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

கோபி லுவாக்

கோபி லுவாக் என்பது இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு திமோரில் முதன்மையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு தனித்துவமான காபி ஆகும். சிறிய பாலூட்டியான ஆசிய பாம் சிவெட் விலங்கை இந்த காபி தயாரிக்க பயன்படும் பொருள் சாப்பிட வைத்து வெளியேற்றப்படுவதை வைத்து உருவாக்குகின்றனர்.

இந்த காபியின் விலை $600 வரை இருக்கும், அதாவது இந்திய மதிப்பில் 49,823 ரூபாய் இருக்கும்.

பிளாக் ஐவரி காபி

இது தாய்லாந்தில் தயாரிக்கப்படும் மிகவும் அரிதான மற்றும் விலையுயர்ந்த காபி. அரபிகா பீன்ஸ் யானைகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டு, பின்னர் பீன்ஸ் அவற்றின் கழிவுகளிலிருந்து சேகரிக்கப்படுகிறது.

அதன் தனித்துவமான உற்பத்தி செயல்முறை காரணமாக இது தனித்து நிற்கிறது. இதன் விலை சுமார் $500 ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 41,519 ரூபாய் இருக்கும்.

பாசண்டா சான்டா இன்ஸ்

இந்த காபி பிரேசிலில் உள்ள மாண்டிகேரா மலைகளின் அடிவாரத்தில் பயிரிடப்படுகிறது மற்றும் அதன் உற்பத்தி நூறு ஆண்டுகளுக்கு முந்தையது. இதன் சிறப்பே அதன் பழம் மற்றும் இனிப்பு சுவை தான்.

இந்த சுவையான பானத்தின் பொருட்களில் வெவ்வேறு சுவையான பழங்கள் இருப்பதால் அவர்கள் இந்த பானத்தின் மீது ஈர்க்கப்படுகிறார்கள். 400 கிராம் 3,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

என்ன தான் இதன் மதிப்பு கூட இருந்தாலும் இந்த காபி உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களால் அருந்தப்படுகிறது.

செயின்ட் ஹெலினா காஃபி

செயின்ட் ஹெலினா தீவில் இந்த காபியை பயிரிடுகின்றனர். இந்த தீவு அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில், ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 1,200 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

தனித்துவமான நறுமணம் கொண்ட இந்த காபியை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராக உள்ளனர். இதன் விலை $80 வரை இருக்கலாம். இந்திய மதிப்பில் 6,643 ரூபாயாகும்.

பிளாக் ப்ளட் ஆஃப் தி எர்த்

பாரம்பரிய காபி இல்லையென்றாலும், பிளாக் ப்ளட் ஆஃப் தி எர்த் ஒரு ஆடம்பர காபியாக கருதப்படுகிறது. இதன் விலை சராசரியாக $50 ஆகும். இந்திய மதிப்பில் 4,152 ரூபாயாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?