cannibalism

 

Twitter

உலகம்

Cannibalism : தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்; 7 விசித்திர உண்மைகள்

Govind

வரலாற்றாசிரியர்கள், மானுடவியலாளர்கள் பல ஆண்டுகளாக நரமாமிசத்தின் வரலாறு குறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்கின்றனர். அது ஏன் எப்படி நிகழ்கிறது? யார் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு அவர்கள் விடை தேடுகின்றனர். இந்த ஆய்வு பண்பாடு, உடல்நலம், சடங்கு ஆகியவற்றுடன் நரமாமிசத்திற்கு உள்ள தொடர்பு குறித்து நடக்கிறது. நரமாமிசம் குறித்த ஏராளமான கட்டுக்கதைகளும் உள்ளன. அதே நேரம் ஒரு காலத்தில் நரமாமிசம் எப்படி நடைமுறையிலிருந்தது என்பன போன்ற அதிசியமூட்டும் கருத்துக்களை வல்லுநர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். அவற்றை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

மனிதர்கள் நரமாமிசத்திற்கு எதிரானவர்கள் - ஆனால் விதிவிலக்கு உண்டு

மனிதகுல வரலாற்றில் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நரமாமிசம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு உயிரியல் காரணம் உள்ளது. சக மனிதர்களை உண்பது நோயை ஏற்படுத்தும். சக மனிதனின் மூளையை உண்ணும்போது மாடுகளுக்கு வரும் Mad Cow போன்றதொரு நோயை ஏற்படுத்தும். இது நமது மூளையை தாக்கி உடலை நடுங்க வைத்து இறுதியில் இறந்து போக வைக்கும்.

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு மேலே தென்மேற்கு பசிபிக் கடலில் தீவுகளாய் இருக்கும் பப்புவா நியூ கினியாவில் உள்ள ஃபோர் பழங்குடியினர் நரமாமிசத்திற்குப் பெயர் பெற்றவர்கள். 1950 களின் பிற்பகுதி வரை அவர்கள் இறந்து போனவர்களின் உடல்களைச் சடங்கு காரணமாகச் சாப்பிட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய் வந்து இறந்து போயினர். அதே நேரம் இந்த நோயை எதிர்க்கும் வண்ணம் சிலரிடம் மரபணு மாற்றமும் நடந்துள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது சமூக அமைப்பு மாறி, மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகச் சடங்கு நிமித்தம் நரமாமிசம் சாப்பிடுவது அங்கே குறைந்து வருகிறது.

Cannibals

விலங்குகளும் நரமாமிசத்திற்கு ( தன் இனத்தையே உண்பது) எதிரானவைதான் - ஆனால் எப்போதும் இல்லை

சில ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு தேரை, சிவப்பு சிலந்தி போன்ற பூச்சி மற்றும் சில விலங்கினங்கள் தன்னினத்தை உண்பதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நடாலி ஆஞ்சியர் கண்டுபிடித்தார். கரும்புத் தேரை தன்னினத்து முட்டைகளை சாப்பிடுவதை விரும்புகிறது.

இது இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, எதிர்கால போட்டியாளர்களையும் அப்புறப்படுத்துகிறது. இத்தகைய மனித மற்றும் விலங்கின நரமாமிசப் பழக்கம் சில விளக்கங்களை அளிக்கிறது. கலாச்சார விழுமியங்களுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி செயல்பட முடியும் என்பதை இது காட்டுகிறது.

மனித கறியை உண்ணும் மனிதர்கள்

நரமாமிசப் பழக்கம் இல்லாதவர்கள்தான் நரமாமிசம் என்ற பெயரையே வைத்தனர்

நரமாமிசம் எப்போது துவங்கியது, எத்தனை இனக்குழுக்கள் இதைக் கடைப்பிடித்தன போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிப்பது வரலாற்றாசிரியர்களுக்குக் கடினம். நவீன மானுடவியலாளர்கள் நரமாமிசம் என்று அழைப்பதைத் தவிர்த்து விட்டு மானுடவியல் என்றே அழைக்க விரும்புகிறார்கள்.

சடங்கிற்காகவும், பஞ்சத்தின் போதும் நரமாமிசத்தை உண்ணும் கலாச்சார மரபுகள் சில இருந்தன. இன்னொரு புறம் நரமாமிசம் என்ற வார்த்தை காலனியாதிக்கத்தின் பேரில் பழங்குடி மக்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் அரசியல் காரணத்திற்கும் பயன்பட்டிருக்கிறது.

கரீபியன் தீவுகளை ஆக்கிரமித்த ஸ்பானிய நாட்டவர்கள் அத்தீவு மக்கள் நரமாமிசம் சாப்பிட்டதாக அவதூறு செய்தனர். இதை வரலாற்று அறிஞர்கள் நிரூபித்திருக்கின்றனர். ஸ்பானியர்கள்தான் நரமாமிசம் அதாவது கானிபலிசம் என்ற வார்த்தையை கரீபிய மக்களோடு போரிடும் காரணத்திற்காகக் கண்டுபிடித்தார்கள். இது கொலம்பஸ் காலத்திலிருந்தே நடக்கிறது.

சூனியம்

நரமாமிச சடங்குகள் வியப்பூட்டும் வகையில் சிக்கலானவை

நரமாமிசம் குறித்த ஐரோப்பியக் குறிப்புகளில் முதல்முறையாக கி.பி.1500களில் மான்டெய்ன் என்பவர் எழுதிய கேன்னிபல்ஸ் கட்டுரை முக்கியமானது. அதில் இன்றைய பிரேசில் நாட்டில் வசித்த டுபி மக்களிடையே நரமாமிசப் பழக்கம் இருந்தது குறித்த குறிப்புகள் இருக்கிறது. சில நேரம் அவர்கள் பிடித்து வைத்திருந்த கைதிகளுடன் பல மாதங்கள் வாழ்ந்து விட்டு பிறகு அவர்களை சாப்பிடுவார்கள். அப்போது கைதிகளும் டுபி மக்களும் ஒருவருக்கொருவர் பாட்டும் பாடுவார்கள்.

டுபி மக்கள் கைதிகளுக்கு வரவிருக்கும் மரணத்தைப் பற்றி கேலி செய்து பாடுவார்கள். கைதிகளோ அதற்கு மந்திரம் போன்ற பொருளில் எதிர்ப்பாட்டு பாடுவார்கள்.

டுபி மக்களைப் பற்றிய ஒரு நூல் ஒன்றில் இசை ஆய்வாளர் கேரி டாம்லின்சன் இந்த நரமாமிசப் பழக்கத்தை "சதையின் பொருளாதாரம்" என்று குறிப்பிடுகிறார். இது பழங்குடி மக்களிடையே பல தலைமுறைகளாக இருந்தது என்கிறார்.

tribes

நரமாமிசம் காலனிய அமெரிக்காவின் நடைமுறையிலிருந்தது

நரமாமிசப் பழக்கம் மிகப்பழங்கால வரலாற்றிலும், வளர்ச்சியடையாத நாடு - சமூகங்களிலும் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். அப்படி இல்லை. ஆரம்பக்கால அமெரிக்க வரலாற்றிலும் நரமாமிசம் ஒரு அம்சமாக இருந்தது.

2013 ஆம் ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ்டவுனில் நரமாமிசத்தின் ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர். குறிப்பாக 14 வயது சிறுமியின் மண்டை ஓட்டில் உள்ள அடையாளங்களை வைத்து 1609 ஆம் ஆண்டின் கடுங்குளிர் காலத்தில் குடியேறியவர்களால் அவள் உண்ணப்பட்டதை விளக்கினார்கள்.

1850 களில் நடந்த அமெரிக்காவின் டோனர் விருந்தில் நரமாமிசம்

அமெரிக்காவில் நரமாமிசம் பற்றிப் பேசினால் அதில் டோனர் விருந்து நிகழ்வு நிச்சயம் இருக்கும். 1846 ஆம் ஆண்டில் பனிமூட்டம் நிறைந்த சியரா நெவடா மலைகளில் சிக்கிய பயணிகள் நரமாமிசத்தை கடைப்பிடிக்க வேண்டிய நிலை இருந்தது. அவர்கள் வேக வைத்த விலங்குகளின் எலும்புகள், தோல்கள், மட்டுமல்ல வளர்ப்பு நாயான யூனோவையும் சாப்பிட்டார்கள். இதன் பிறகே அவர்கள் நரமாமிசத்தை நாடினார்கள். இதுதான் டோனர் விருந்து என்று அழைக்கப்பட்டது.

Cannibalism

நரமாமிசம் சில நேரங்களில் மருத்துவச் சிகிச்சைக்காகப் பயன்பட்டது

ஐரோப்பாவின் வரலாறு முழுவதிலும் நரமாமிசத்தின் பயங்கரமான பல சான்றுகள் உள்ளன. அதில் ஜெர்மனியில் நடந்தது வினோதமாக இருக்கிறது. அங்கே கி.பி.1600 -1800 ம் நூற்றாண்டுகளில் மரணதண்டனை நிறைவேற்றும் பணியாளர்கள் தூக்கிலிட்டுச் செத்துப் போனவர்களின் உடல் பாகங்களை மருந்து தயாரிக்க விற்பனை செய்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு உபரி வருமானமாக இருந்தது.

கேத்தி ஸ்டூவர்ட் எழுதிய Defiled Trades and Social Outcasts – தீட்டுப்பட்ட வர்த்தகங்கள் மற்றும் சமூகப் புறக்கணிப்புகள் நூலில் இது விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. மனிதக் கொழுப்பு மற்றும் உடைந்த எலும்புகள் சுளுக்கு மற்றும் மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்தாக விற்கப்பட்டது. இதை மக்கள் தைலமாகத் தேய்த்துக் கொண்டார்கள் மாறாகச் சாப்பிடவில்லை.

மருந்து தயாரிப்பவர்கள் வழக்கமாக மனித கொழுப்பு, சதை, எலும்புகளைச் சேகரித்து வைத்துக் கொண்டனர். மேலும் கை - கால் வலிகளுக்கு மண்டை ஓட்டை தூளாக்கி திரவத்துடன் கலந்து கொடுத்ததற்கான சான்றுகளும் உள்ளன.

இத்தகைய சிகிச்சை முறைகள் அன்னியமாகத் தோன்றலாம். ஆனால் குழந்தை பிறப்பின்போது உள்ள நஞ்சுக் கொடியை உண்பது ஒரு நவீனகால ஆரோக்கிய பழக்கமாகி விட்டதை நினைவில் கொள்ளுங்கள்.

பெரும்பாலான நேரங்களில் நரமாமிசம் குறித்த மனித குலத்தின் தீர்ப்பு அது வேண்டாம் என்றே இருக்கிறது. ஆனால் எப்போதாவது நரமாமிசம் பழக்கமாக இருக்கும் போது அது ஏன் இருந்தது என்பதை வரையறுப்பது அதிசயமூட்டும் வகையில் கடினமாக உள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?