7 Magical Destinations To Witness In Your Lifetime Twitter
உலகம்

உலகின் அழகான இடங்கள்: மதி மயங்க வைக்கும் மாயாஜால ஸ்பாட்ஸ்

Priyadharshini R

உலகின் சில இடங்களை பார்க்க அல்லது ரசிக்க இரண்டு கண்கள் போதாது. இயற்கையாகவே அமைந்துள்ள எழில் கொஞ்சும் இடங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. அவ்வாறு இயற்கையில் மிக அழகான இடங்கள் பற்றி பார்ப்போம்.

Glowworm குகைகள், நியூசிலாந்து

1880 முதல் நியூசிலாந்தின் வைட்டோமோவில் உள்ள தனித்துவமான பளபளப்பு குகைகளால் மக்கள் கவரப்படுகிறார்கள்.

45 நிமிட படகு சவாரியின் போது மில்லியன் கணக்கான பளபளப்பு புழுக்கள் குகையை ஒளிரச் செய்வதை நீங்கள் பார்க்கலாம்.

நியூசிலாந்தின் முக்கிய மையமான வடக்கு தீவில் இந்த குகைகளை நீங்கள் காணலாம். இந்தப் புழுக்கள் அளிக்கும் மாயாஜாலத்தைக் காண சுற்றிலும் இருந்து பயணிகள் இங்கு கூடுகிறார்கள்.

பரோ தக்ட்சாங் ( Paro Taktsang) பூடான்

பரோ தக்ட்சாங் என்ற இந்த கோயில் பள்ளத்தாக்கிலிருந்து 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

காடு வழியாக 2-3 மணிநேரம் கடந்து செல்லும் இந்த பாதையில் அழகிய இயற்கைக்காட்சிகள் நிரம்பியுள்ளது. இது பயணத்தை ஒரு சாகசமாக மாற்றுகிறது. கோவிலில் இருந்து இந்த கண்கொள்ளாக் காட்சியை பயணிகள் கண்டு செல்கின்றனர்.

Fairy Pools, Isle of Skye ஸ்காட்லாந்து

இந்த குளங்கள் மாயாஜாலமானவை. இது தெளிவான நீர் மற்றும் கம்பீரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. பயண காதலர்கள் அனைவரும் விரும்பக்கூடிய இடமாக இது உள்ளது.

இங்கே அழகிய நீல நிற குளங்கள் தனித்தனியாக இருக்கின்றன. நீச்சல் விருப்பம் இல்லாவிட்டால் அவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.

Ha Long Bay, Vietnam வியட்நாம்

ஹா லாங் பே வியட்நாமின் வடகிழக்கு பகுதியில் டோங்கின் வளைகுடாவில் அமைந்துள்ளது.

பரந்து விரிந்த நீல கடலுக்கு நடுவே அமைந்துள்ள பச்சை நிற மலையின் மையத்தில் அமைந்துள்ள குகைகளே இங்கு தனித்துவமானதாக உள்ளது.

இயற்கையின் இந்த அற்புதங்களை படகு மூலமாக பார்க்கலாம்.

பாரிய பள்ளத்தாக்கு தேசிய பூங்கா – அமெரிக்கா

வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு என மூன்று பாகங்களாக பிரிந்து இருந்தாலும் அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப்படும் தெற்கு பிரதேசம் இதுவாகும்

பார்ப்பதற்கு மாயாஜாலம் போல தோன்றும் இந்த இடம் கண்களுக்கு ஒரு மிகச்சிறந்த விருந்து.

என்ன தான் புகைப்படத்தில் கண்டு சிலிர்த்தாலும் நேரில் பார்க்கும் பொழுது நிச்சயம் இவ்விடம் உங்களை ஆச்சரியப்படுத்த தவறாது.

Plitvice அருவி இயற்கை பூங்கா – குரோசியா

மிரளவைக்கும் அழகிய பூங்காவில் தெளிவான ஓடைகள், பல நீர்வீழ்ச்சிகள் மூலமாக ஒன்றாக இணைந்து பயணிக்கின்ற அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது.

நீங்கள் இந்த பூங்காவினை மர நடைபாதைகள் மூலமாகவும் பாலங்கள் மூலமாகவும் அங்கங்கு சுற்றி திரியும் பாம்புகளோடு இணைந்து கண்டுகளிக்கலாம்.

கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகளும் உங்களை இந்த பயணத்தில் உற்சாகமூட்டும். ஆண்டுதோறும் 12 லட்சம் பேரை இந்த இடம் ஈர்க்கிறது.

வானவில் மலைகள் – சீனா

மலைகள் கலர் கலராக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஆசியாவிலேயே அழகான இடம் உள்ளது.

அந்த இடம் தான் வானவில் மலைகளின் தேசிய புவியியல் பூங்கா. பாரிய பள்ளத்தாக்கை போலவே மிகவும் ஈர்க்கக் கூடியது. கண்களை மயக்கும் மரூன், மஞ்சள் பச்சை ஆகிய நிற பாறைகளை கொண்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?