தற்போது தனித்து வாழும் அல்லது தனிமையில் வாழும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
வேலை நிமித்தமாக வெளியூருக்கு செல்லும் பல பெண்கள் கூட இப்பொதேல்லாம் தனியாக வீடுகளில் தங்கி வருகின்றனர். நம் உணர்ச்சிகளுடன், பழக்கங்களுடன் ஒத்துவராத ஒருவருடன் நாம் அட்ஜஸ்ட் செய்து வாழ அவசியம் இல்லை என்ற எண்ணம் இப்போது பரவலாக இருப்பது ஒரு முக்கிய காரணம் எனலாம்.
இவர்களை ஆங்கிலத்தில் லோன் வுல்ஃப் - Lone Wolf என்று அழைக்கின்றனர்.
மேலும் தனிமையில் வாழ்வதால் நம்மை நாமே புரிந்துகொள்ளவும் நமக்கு நல்லவாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு இயற்கையாகவே தனிமையில் இருந்தால் கொஞ்சம் பயமில்லாமல் நிம்மதியாக இருப்பது போல தோன்றும்.
இந்த 7 குணாதிசயங்கள் இருந்தால் நாம் தனிமையான நபர் என்று தெரிந்துகொள்ளலாம்
பொதுவாக சுயமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கும் நபர் தனிமையான நபராக இருக்கிறார். நமக்கு எதுக்கு டா வம்பு என்று ஊருடன் ஒத்துப்போகிறவர் இல்லை.
சரி எது தவறு எது என்று ஆராய்ந்தோ அல்லது அனுபவப்பட்டோ இவர்கள் தெரிந்துகொள்கின்றனர். மற்றவரிடம் ஆலோசனை கேட்டாலும் இறுதிமுடிவு அவர்களுடையாதாக இருக்கிறது. அவர்களின் முடிவுகளில் மற்றவரின் தலையீட்டையும் அவர்கள் விரும்புவதில்லை
பெயருக்கு ஏற்றார்போல இவர்கள் பெரும்பாலும் தனியாக கூட்டமில்லாமல் இருந்தால் சந்தோஷமாகவும் மன நிம்மதியுடனும் இருக்கின்றனர். இவர்கள் மனம் விட்டு பேச நினைப்பதை பகிர்ந்துகொள்ள ஒரு துணையை தேடுவதில்லை. இவர்களுக்கு இவர்களே பக்கபலம்
இவர்கள் பெரும்பாலும் ஆழ்ந்த சிந்தனையாளர்களாக இருக்கின்றனர். இயற்கையாக இவர்களிடம் இருக்கும் பழக்கம் இது. தேவையற்ற சிந்தனை அல்ல, எதையும் ஆழமாக ஆராயும் தன்மை.
அவர்களுக்குள்ளேயே பேச்சு வார்த்தைகள், வாக்குவாதங்கள் மாற்று கருத்துகளை விவாதிக்கும் திறன் கொண்டவர்கள்
எந்த ஒரு விஷயத்திலும், இரண்டாம் நபரின் உள்ளீடு இல்லாததால், மிகவும் தனித்துவமான நபராக இவர்கள் இருக்கின்றனர். எந்த ஒரு நம்பிக்கையையும், உலகத்தின் பார்வையை விடவும் இவர்களின் கருத்துகள் மாறுபட்டே இருக்கிறது
இவர்களின் ஒர்க் எத்திக்ஸ் அதாவது ஒரு வேலையை செய்யும் நெறிமுறை வலுவானதாக இருக்கிறது. தங்களின் இலக்கை அடைவதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள் மற்றும் தங்களை தாங்களே ஊக்கப்படுத்திக்கொள்கின்றனர்
இவர்களில் பெரும்பாலானோர் உணர்ச்சிகளை சரியாக கையாளுபவராக இருப்பதில்லை. எல்லாவற்றிற்கும் தங்களையே இவர்கள் சார்ந்திருப்பதால், சில சமயங்களில் உணர்ச்சிவசப்படவும், அதனால் சங்கடம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust