மனைவியின் பிறந்தநாளை மறந்தால் கணவருக்கு சிறையா? வினோத சட்டங்கள் கொண்ட நாடுகள் தெரியுமா? twitter
உலகம்

மனைவியின் பிறந்தநாளை மறந்தால் கணவருக்கு சிறையா? வினோத சட்டங்கள் கொண்ட நாடுகள் தெரியுமா?

சில இடங்களில் கொஞ்சம் வித்தியாசமான, இன்னும் சொல்ல போனால் விசித்திரமான சட்டங்களை பின்பற்றி வருகின்றனர். அவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Priyadharshini R

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சட்டங்களை விதித்து அதனை பின்பற்றி வருகிறது. நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் நிலை நிறுத்திக்கொள்ள இந்த சட்டங்கள் விதிக்கப்படுகின்றன.

ஒரு சில இடங்களில் கொஞ்சம் வித்தியாசமான, இன்னும் சொல்ல போனால் விசித்திரமான சட்டங்களை பின்பற்றி வருகின்றனர். அவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

காப்ரி

காப்ரியில், நாய் உரிமையாளர்கள் தங்கள் நாய் தெருக்களில் மலம் கழித்தால் தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் டிஎன்ஏ மூலம் அதை கண்டுபிடித்து நாய் உரிமையாளர்களுக்கு €2,000 ($2,400) அபராதம் விதிக்கப்படும்.

ஆஸ்திரேலியா

இந்த ஆஸ்திரேலிய சட்டம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம், விக்டோரியா சட்டத்தின் கீழ், சரியான உரிமம் இல்லாமல் விளக்கை மாற்றுவது சட்டத்திற்கு எதிரானது.

விக்டோரியாவில், சான்றளிக்கப்பட்ட எலக்ட்ரீஷியன்கள் மட்டுமே விளக்கை மாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இதை மதிக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும்.

கிரீஸ்

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அக்ரோபோலிஸ், எபிடாரஸ் தியேட்டர்( பழங்கால திரையரங்கம்) போன்ற சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ஹை ஹீல்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது பழங்கால பாரம்பரியத்திற்கு உகந்ததாக இல்லை தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மென்மையான காலணிகளை மட்டுமே அணிய அனுமதி.

இத்தாலி

மிலனின் டியோமோ மற்றும் சியானா கதீட்ரல் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் புறாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது இத்தாலிக்குச் சென்ற எவருக்கும் தெரியும்.

இதைக் கருத்தில் கொண்டு, 2008 ஆம் ஆண்டில் இத்தாலிய அரசாங்கம் வெனிஸின் புகழ்பெற்ற செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்தது.

மீறினால் 700 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு உணவளிப்பது பறவைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிப்பதால், உள்ளூர் அதிகாரிகள் இந்த வழக்கத்தை தடை செய்துள்ளனர்.

சமோவா

சமோவாவில் மனைவியின் பிறந்தநாளை மறந்தால் கணவன் மனைவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தவறு குறித்து மனைவி போலீசில் புகார் அளித்தால், கணவன் லாக்-அப்புக்கு சென்று சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்பதே இந்த விதியின் நோக்கமாகும்.

தாய்லாந்து

தாய்லாந்தில் தவறுதலாக அந்நாட்டு  கரன்சியை மிதித்து விட்டால் சிறைக்கு செல்ல வேண்டுமாம். தாய்லாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டால் கவனமாக நடந்து செல்லுங்கள்.

துபாய்

துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ, பாசம் காட்டவோ கூடாது. குறிப்பாக இங்கு வரும் தம்பதிகள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மீறினால் சிறை தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?