ஜெர்மனியில் மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் சக ஊழியரின் வென்டிலேட்டரை ஆஃப் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வென்டிலேட்டரின் சத்தம் எரிச்சலூட்டியதால் அதனை அனைத்ததாக 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் தென்மேற்கில் இருக்கும் மன்ஹெய்ம் நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த மூதாட்டி இரண்டு முறை வென்டிலேட்டரை ஆஃப் செய்ததாக கூறப்படுகிறது.
இது கொலை முயற்சியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.
ஆனால் மூதாட்டி கொலை முயற்சி குற்றச்சாட்டை மறுத்துவருகிறார். அவர் தனக்கு சத்தம் வந்ததாலேயே அதை ஆஃப் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் காவல்துறையினர் கூறுவதன் படி, அந்த மூதாட்டி முதல் முறை வென்டிலேட்டரை அணைத்த போது அந்த கருவி நோயாளிக்கு மிக முக்கியமானது என மருத்துவர்கள் புரியவைத்துள்ளனர். ஆனால் அதே நாளில் மீண்டும் அவர் அதனை அணைத்திருக்கிறார்.
இந்த சம்பவம் நவம்பர் 27ம் தேதி நடந்ததாக கார்டியன் தளம் கூறியுள்ளது.
"நல்லவேளையாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. ஆனால் அவர் உயிர் பிழைக்க சிறந்த கண்காணிப்புத் தேவை" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட மூதாட்டி இரண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust