8 Most Expensive Animals in the World  Twitter
உலகம்

ஒரு அரேபிய குதிரை 82 லட்சமா? உலகெங்கிலும் உள்ள விலையுயர்ந்த விலங்குகள் குறித்து தெரியுமா?

இந்த விலங்குகளை வாங்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கில் செலவிடப்படுகிறது. அப்படி உலகெங்கிலும் உள்ள விலை உயர்ந்த 8 விலங்குகளை பற்றி தெரிந்து கொள்வோம்

Priyadharshini R

உலகில் சில பொருட்கள் நம்பமுடியாத விலையில் இருக்கும். அதன் தயாரிப்பிற்காகவும், அந்த பிராண்டுக்காகவும் சாதரணமாக நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கூட அதிகமாக இருக்கும்.

ஆனால் சில செல்ல பிராணிகளும், வளர்ப்பு விலங்குகளும் இதே போன்று விலையுயர்ந்ததாக இருக்கிறதாம்.

இந்த விலங்குகளை வாங்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கில் செலவிடப்படுகிறது. அப்படி உலகெங்கிலும் உள்ள மிக விலை உயர்ந்த 8 விலங்குகளை பற்றி தெரிந்து கொள்வோம்

அரேபிய குதிரை

விலை : தோராயமாக $100,000 ( இந்திய மதிப்பில் ரூ.82,49,290 )

அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் இந்த குதிரைகள், பழமையான இனத்தை சேர்ந்தவை.

வித்தியாசமான தலை வடிவமும், உயரமான வால் இருப்பதால் மற்ற குதிரைகளிடமிருந்து தனித்துவமாக்குகிறது.

லாவெண்டர் அல்பினோ பால் மலைப்பாம்பு

விலை : தோராயமாக $ 40,000 ( இந்திய மதிப்பில் ரூ.33,00,704 )

இந்த மலைப்பாம்புகள் மஞ்சள் நிற உடல் மற்றும் சிவப்பு நிற கண்களுடன் காணப்படுகிறது.

'ஹை கான்ட்ராஸ்ட்' பாம்பு என்றும் அழைக்கப்படும் இதனை செல்லப்பிராணிகளாக மக்கள் வாங்கி வைத்து கொள்கின்றனர்.

செம்மறி நாய்

விலை : தோராயமாக $15,000 ( இந்திய மதிப்பில் ரூ.12,37,723 )

இந்த நாய் இனம் பெரும்பாலும் பிரிட்டனில் காணப்படுகிறது.

இந்த நாய்கள் ஒரு நாளைக்கு 50 மைல்கள் வரை கடக்குமாம். பார்க்க க்யூட்டாக இருக்கும் இதனை மக்கள் வாங்கி வளர்க்க நினைக்கின்றனர்.

திபெத்திய மஸ்தீப்

விலை : தோராயமாக $ 582,000 ( இந்திய மதிப்பில் ரூ.4,80,33,333)

சிங்கம் போல தோற்றமளிக்கும் இது உலகின் விலையுர்ந்த நாய் வகைகளில் ஒன்றாகும்.

அவை பழுப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு என பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன.

இந்த வகை நாய்களுக்கு அரண்மனைகள் போன்றவற்றைப் பாதுகாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தங்களைத் தற்காத்துக் கொள்ள அவை புலிகளுடனும் சண்டையிடும் திறன் கொண்டவையாம்.

மிஸ் மிஸ்ஸி

விலை : தோராயமாக $ 1,200,000 ( இந்திய மதிப்பில் ரூ.9,89,87,400)

மிஸ் மிஸ்ஸி ஹோல்ஸ்டீன் இனத்தைச் சேர்ந்த பசு. இது சராசரி பசுவை விட 50% அதிக பால் உற்பத்தி செய்கிறது.

இது தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாடு என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

கிராண்ட் சாம்பியன்கள் போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு வென்றுள்ளதாம்.

டி பிரஸ்ஸாவின் குரங்கு

விலை : தோராயமாக $ 10,000 ( இந்திய மதிப்பில் ரூ.8,24,852 )

இந்த வகை குரங்குகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. அதிகபட்ச ஆயுட்காலம் 30 ஆண்டுகள் ஆகும்.

சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த விலங்குக்கு வெவ்வேறு வகையான இனங்கள் இல்லையாம். இதனால் இதனை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

சர் லான்சலாட் என்கோர்

விலை : தோராயமாக $155,000 ( இந்திய மதிப்பில் ரூ.12,812,762)

இந்த விலங்கு உலகின் முதல் குளோன் செய்யப்பட்ட நாய் மற்றும் உலகின் மிக விலையுயர்ந்த விலங்கு ஆனது என்பது உங்களுக்குத் தெரியுமா?

புளோரிடாவில் உள்ள எட்கர் மற்றும் நினா ஓட்டோ தம்பதியிடம் உலகப் புகழ்பெற்ற லான்சலாட் நாய் இருந்தது, ஆனால் புற்றுநோயால் 2008 இல் இறந்தது. பின்னர் அதன் டிஎன்ஏவை குளோனிங் செய்ய முடிவு செய்தனர்.

இந்த வழியில் சர் லான்சலாட் என்கோர் பிறந்து.

சீன க்ரெஸ்டட்

விலை : தோராயமாக $ 5000 ( இந்திய மதிப்பில் ரூ.4,12,628 )

சீன க்ரெஸ்டட் மிகவும் விலையுயர்ந்த நாய்களில் ஒன்றாகும். இதற்கு உடலில் ரோமம் இருக்காதாம்.

பாதங்கள் மற்றும் முகங்களைச் சுற்றி மட்டுமே முடிகள் இருக்குமாம். மென்மையான தோலை கொண்ட இந்த வகை நாய்கள் 10 பவுண்டுகளுக்கு மேல் எடை கொண்டதாக உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?