A look at UNESCO’s first ever heritage site in world Twitter
உலகம்

யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடித்த உலகின் முதல் பாரம்பரிய தலம் எது தெரியுமா?

யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடித்த முதல் இடம் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது குறித்த ஒரு பார்வை இங்கே.

Priyadharshini R

யுனெஸ்கோ என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு.

1945 ஆம் ஆண்டு உருவான இந்நிறுவனம், இன்று 193 உறுப்பு நாடுகளையும் 12 இணை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. யுனெஸ்கோ தளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடித்த முதல் இடம் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது குறித்த ஒரு பார்வை இங்கே.

யுனெஸ்கோவின் உலகின் முதல் பாரம்பரிய தலங்களாக கலாபகோஸ் தீவுகள் மற்றும் குயின்டோ நகரம் அங்கீகரிக்கப்பட்டது.

'கலாபகோ' என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு 'ஆமை' என்று பொருள். யுனெஸ்கோ 1978 இல் கலாபகோஸை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்தது.

கலாபகோஸ், லேண்ட் உடும்பு, ஆமை, பறக்க முடியாத கார்மோரண்ட் போன்ற பல உள்ளூர் இனங்களின் இருப்பிடமாக அறியப்படுகின்றன.

குயின்டோ நகரம்

ஈக்வடாரின் பழமையான தலைநகரமாகும் குயின்டோ. பெரும்பாலும் உலகளாவிய பயணிகளால் கவனிக்கப்படுவதில்லை என்றாலும் அதன் வரலாறும் முக்கியத்துவமும் அலாதியானது. குயின்டோ முதன்முதலில் 1978 இல் யுனெஸ்கோவால் ஒரு வரலாற்று நகரமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நகரம், 2850 மீ உயரத்தில் உள்ளது.

இது உலகின் இரண்டாவது மிக உயர்ந்த தலைநகரமாகும். இது பிச்சிஞ்சா பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று, நகரம் ஒரு பரிதாபமான நிலையில் உள்ளது, கலாபகோஸ் செல்லும் வழியில் ஒரு போக்குவரத்து நகரமாக மட்டுமே பயணிகளால் பார்க்கப்படுகிறது.

மதிப்பிடப்படாத இந்த நகரம் அற்புதமான வரலாற்றையும் வளமான கலாச்சாரத்தையும் கொண்டுள்ளது. இந்த இடம் சிறந்த அருங்காட்சியகங்கள் மற்றும் பழங்கால கட்டிடக்கலைகளால் நிறைந்துள்ளது.

தற்போது உலகளவில் 2023ஆம் ஆண்டின் படி யுனெஸ்கோவின் பட்டியலில் 1157 தலங்கள் இடம்பிடித்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?