Airplane Twitter
உலகம்

வீட்டுக்கு வீடு விமானம் உள்ள அதிசய நகரம் - இதற்கும் இரண்டாம் உலக போருக்கும் என்ன தொடர்பு?

Gautham

வீட்டில் பைக், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள் அல்லது நம் வீட்டில் கூட நிறுத்தி வைப்போம்.

கொஞ்சம் செல்வந்தர்களாக இருந்தால் அவர்கள் விட்டில் கார், வேன் போன்ற சொகுசு வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவ்வளவு ஏன் டிராவல்ஸ் நடத்துகிறார்கள் என்றால் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களைக் கூட வீட்டிலோ அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள ஷெட்களிலோ நிறுத்திப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் வீடுகளில் விமானங்களை நிறுத்திப் பார்த்திருக்கிறீர்களா..? விமானங்கள் தரையில் இருந்து எழும்பிப் பறக்கவும், பாதுகாப்பாகத் தரையிறங்கும் அளவுக்கு அகலமான நீளமான சாலைகளைப் பார்த்திருக்கிறீர்களா..? அப்படி ஒரு ஆச்சரிய நகரம் அமெரிக்காவில் இருக்கிறது. இங்கு பெரும்பாலான வீடுகளின் கராஜ்களில் கார், பைக் போன்ற சாதாரண வாகனங்களைப் போல விமானங்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

வரலாறு

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவத்துக்கு விமானிகளின் தேவை அதிகமாக இருந்தது. எனவே அமெரிக்கா பல திறமையான இளைஞர்களுக்கு விமானத்தை ஓட்ட பயிற்சியளித்து போரில் களமிறக்கியது. அதன் விளைவாக 1939ஆம் ஆண்டில் 34,000 பேராக இருந்த விமானிகளின் எண்ணிக்கை 1946ஆம் ஆண்டில் 4,00,000த்துக்கும் மேலாக அதிகரித்துவிட்டது.

மறுபக்கம் போரின் போது விமானங்கள் எளிதாகப் பறக்கவும், தரையிறங்கவும் அமெரிக்கா முழுக்க பல ஏர்ஃபீல்ட்களைக் கட்டமைத்தது. அதுவும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அமெரிக்காவில் சிவில் விமான சேவை ஆணையம், இந்த ஏர்ஃபீல்ட்களை தொடர்ந்து பயன்படுத்த ஒரு புதிய யோசனையை முன்வைத்தது. இந்த ஏர்ஃபீல்ட்களை ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு பகுதியாக மாற்றலாம் என்றது. இதை ஏர்பார்க் என்று அழைக்கின்றனர்.

வீட்டுக்கு வீடு விமானம் இருக்கும் நகரம் எது?

அப்படித் தான் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கெமரான் ஏர்பார்க் (Cameron Airpark) உருவானது. இது போலப் பல ஏர்பார்க்குகள் உருவாயின. உலகம் முழுக்க இப்படி சுமார் 630 ஏர்பார்க்குகள் உள்ளன, அதில் சுமார் 610 ஏர்பார்க்குகள் அமெரிக்காவில் மட்டும் உள்ளன.

இதை @thesoulfamily என்கிற டிக்டாக் பயனர் தன் டிக்டாக் கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால் அக்காணொளியை நம்மால் பார்க்கமுடியவில்லை.

கிட்டத்தட்ட கெமரான் ஏர்பார்க்கில் உள்ள எல்லா வீடுகளிலும் விமானம் என்பது சர்வசாதாரணமாக இருக்கிறது. விமானப்படைத் தளங்களில் இருப்பது போல விமானங்களை நிறுத்த ஹேங்கர்கள் இருக்கின்றன.

விமானங்களின் ரெக்கைகள் வீடுகளின் மீது மோதிவிடாத அளவுக்கு சாலைகள் பிரமாண்டத்துக்கு அகலமாகவும், நீளமாகவும் இருக்கின்றன. கார் போன்ற சாதாரன வாகனங்களும், விமானங்களும் ஒரே சாலையில் பயணிக்கும் அளவு சாலைகள் அகன்று இருக்கின்றன.

இதில் மற்றொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இப்பகுதியில் உள்ள சாலைகளின் பெயர்கள் "போயிங் சாலை" என்பது போல எல்லாமே விமானம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. கெமரான் ஏர்பார்க்கில் வசிக்கும் மக்கள், வேலைக்குச் செல்ல விமானங்களைத் தான் பயன்படுத்துகிறார்களாம்.

வாங்கும் சம்பளம் முழுக்க விமான எரிபொருளுக்கே செலவாகிவிடாதா..? ஒருவேளை அமெரிக்காவில் விமான எரிபொருள் விலை மலிவோ என்னவோ..!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?