துபாய்: அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயில்; எப்போது திறக்கப்படுகிறது?  Twitter
உலகம்

துபாய்: அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயில்; எப்போது திறக்கப்படுகிறது?

குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெள்ளை பளிங்குத் தூண்களை செதுக்கி பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

Priyadharshini R

துபாய் அபுதாபியில் முதல் இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது.இந்த கோயில் பண்டைய இந்து ஷில்பசாஸ்திரங்களின்படி கட்டப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு கட்டிடக்கலை அதிசயம். இந்த கோயிலின் வெளிப்புறம் இளஞ்சிவப்பு மணற்கல்களால் கட்டப்பட்டுள்ளது. அதே சமயம் உட்புறம் வெள்ளை பளிங்குக் கற்களால் ஜொலிஜொலிக்கிறது.

குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வெள்ளை பளிங்குத் தூண்களை செதுக்கி பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த கோயிலின் கட்டமைப்பில் வெப்பநிலை, நில அதிர்வு நிகழ்வுகளை கண்காணிக்க 300க்கும் மேற்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கும் ஏழு கோபுரங்களை இந்த கோயில் கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கவுள்ளார் பிரதமர் மோடி.

பிப்ரவரி 14 அன்று பிரதமரால் திறந்து வைக்கப்படும் இந்த கோயில் பின்னர் மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் பார்வையாளர்கள் மையம், கண்காட்சிகள், பிரார்த்தனைகள் உள்ளன. அரங்குகள், கற்றல் பகுதிகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு வசதிகள், உணவு மைதானம், தோட்டங்கள், புத்தகம் மற்றும் பரிசுக் கடை பல வசதிகள் இந்த கோயிலில் உள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?