TikTok - Pubg Twitter
உலகம்

ஆப்கானிஸ்தானில் டிக் டாக் - பப்ஜி செயலிகளுக்குத் தடை

Priyadharshini R

சீன நாட்டுச் செயலிகளான டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்கு ஏற்கனவே இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தங்களை ஆட்சியை அமைத்த தலீபான்கள் பல்வேறு கடுமையான திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

அதிலும் பெண்கள் கல்வி கற்கத் தடை விதித்த தலீபான்களின் ஆட்சிக்குச் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில், தற்போது டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலீபான்கள் அரசு தடை விதித்துள்ளது.

இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்லும் வகையில் இந்த செயலிகளின் பயன்பாடு இருப்பதாகக் கூறி தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மிக மோசமான வாழ்க்கைத் தரம் இருப்பதாக 94 சதவீத ஆப்கானிஸ்தானியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?