Woman (Rep) Pexels
உலகம்

2 முறை லாட்டரி பரிசு - கோடியில் புரளும் Lucky Woman

முதல் முறை எனக்குப் பரிசு கிடைத்தபோது, அதை நன்றாக என் இஷ்டப்படி செலவு செய்தேன், ஆனால் இந்த முறை ஒரு வீடு வாங்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் அந்த பெண்

Priyadharshini R

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கொலம்பியா நகரில் ஸ்பிரிங் வேலி பகுதியில் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

அவர்களது வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

அங்கு தனக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு லாட்டரி சீட்டு ஒன்றையும் வாங்கி உள்ளார். எதிர்பாராத விதமாக அந்த லாட்டரிச் சீட்டில் அவருக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது.அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடியாகும்.

Lottery Ticket

இது இரண்டாவது முறை அவருக்கு அடித்த அதிர்ஷ்டம் என்று கூறலாம். காரணம் கடந்த 2020 ஆம் ஆண்டு இதே கடையில் இதற்கு முன்னரும் ஒரு லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார்.அந்த லாட்டரிச் சீட்டு அவருக்குப் பரிசு கிடைத்துள்ளது.அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.9 கோடி.

Ticket

இந்த அதிர்ஷ்டம் குறித்து அந்தப் பெண் கூறுகையில்,

முதல் முறை எனக்குப் பரிசு கிடைத்தபோது, அதை நன்றாக என் இஷ்டப்படி செலவு செய்தேன், ஆனால் இந்த முறை ஒரு வீடு வாங்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம், தெற்கு கரோலினாவில் பால் வாங்க கடைக்குச் சென்ற ஒருவர் விருப்பமின்றி வாங்கிய லாட்டரி சீட்டில் ரூ.15 கோடிக்குப் பரிசு கிடைத்த சம்பவமும் நடந்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?