Aliens  NewsSense
உலகம்

ஏலியன்கள்: அமெரிக்கா விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்றம் தனது விசாரணையை தொடர்ந்து நடத்தியது. இந்த விசாரணையில் பல கட்டுக்கதைகள் முறியடிக்கப்பட்டாலும் சில சுவாரஸ்யமான உண்மைகளும் வெளிவந்துள்ளன.

NewsSense Editorial Team

அமெரிக்காவில் யூஎஃப்ஓக்கள் எனப்படும் அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த சர்ச்சைள் அதிகம். கடந்த 50 ஆண்டுகளாக இது குறித்து அமெரிக்க இராணுவம் தான் விளக்கமளித்து வந்தது. தற்போது முதன்முறையாக அமெரிக்கப் நாடாளுமன்றம் இது குறித்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை அமெரிக்க மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். தற்போது அவர்களது விருப்பம் நிறைவேறி வருகிறது. அமெரிக்க ஊடகங்களில் இது பரபரப்பான பேசுபொருளாக மாறி வருகிறது.


கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்றம் தனது விசாரணையை தொடர்ந்து நடத்தியது. இந்த விசாரணையில் பல கட்டுக்கதைகள் முறியடிக்கப்பட்டாலும் சில சுவாரஸ்யமான உண்மைகளும் வெளிவந்துள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஹவுஸ் இன்டெலிஜென்ஸ் துணைக்குழு என அழைக்கப்படும் குழு, பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை தகவல்கள் போன்றவற்றை விசாரித்து வருகிறது. தற்போது இந்தக் குழுதான் யூஎஃப்ஓக்கள் குறித்த கேள்வி-பதில் அமர்வை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் இரண்டு அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். இவர்கள் விவரிக்கப்படாத வான்வழி நிகழ்வுகளின் (UAP - Unexplained Aerial Phenomena ) சாத்தியக்கூறுகள் குறித்து தகவல் அளித்தனர். அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் என்ற யூஎஃப்ஓ -விற்கு அமெரிக்க இராணுவம் வைத்திருக்கும் பெயர்தான் விவரிக்கப்படாத வான் வழி நிகழ்வுகள் (UAP).

விசாரணை

"இந்த விவரிக்கப்பட இயலாத வான்வழி நிகழ்வுகளை அறிந்து கொள்வது சிரமம் என்பது உண்மைதான்" என்று நாடாளுமன்ற உறுப்பினர்களது (The House Intelligence Subcommittee ) துணைக்குழுவின் தலைவரான இந்தியானாவேச் சேர்ந்த பிரதிநிதி ஆண்ட்ரே கார்சன் தனது தொடக்க உரையில் கூறினார்.

"மேலும் அவை உண்மையானவை. இந்த ஏலியன்ஸ் குறித்த தகவல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் வேற்றுக்கிரகவாசிகளால் முன்வைப்பதாக கூறப்படும் பல அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

விசாரணையின் போது, ​​உயர்மட்ட பென்டகன் உளவுத்துறை அதிகாரி ரொனால்ட் மௌல்ட்ரி, கடுமையான பகுப்பாய்வு மூலம், பெரும்பாலான வேற்றுக்கிரவாசிகள் குறித்த தகவல்கள் அனைத்துமே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.

அமெரிக்க பாராளுமன்ற விசாரணையின் போது முன் வைக்கப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விசாரணையில் விளக்கம்

1) விசாரணையின் போது, ​​அமெரிக்கக் கடற்படை உளவுத்துறையின் துணை இயக்குநர் ஸ்காட் ப்ரே, UAP எனப்படும் விவரிக்க இயலாத வான்வழி நிகழ்வுகளின் அறிக்கைகள் ஒரு பத்தாண்டிற்கும் மேலாக அதிகரித்து வருவதாக ஒப்புக்கொண்டார்.

2) இராணுவத்தின் இரகசியமான ஒரு வீடியோவை அவர் காண்பித்தார். அதில் ஒரு சில குறுகிய கேமரா பிரேம்களுக்கு மட்டுமே தெரியும் கோள வடிவிலான அடையாளம் தெரியாத பொருள் இருந்தது. இது கடற்படை பயிற்சி தளத்தின் எல்லையில் ஒரு விமானி பறக்கும் போது கடந்து சென்ற பொருளாகும் என அவர் விளக்கமளித்தார்.

3) ஒரு தனி வீடியோ மற்றும் வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட இதேபோன்ற புகைப்படத்தில், ஒளிரும் முக்கோணங்கள் இரவு வானத்தில் காணப்படுகின்றன.

4) சில நிகழ்வுகளை விளக்குவதற்காக பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை என்று இராணுவ அதிகாரிகள் கூறினர். மேலும் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் 11 காட்சிகள் அமெரிக்க விமானத்தின் அருகே கடந்து சென்றவை என்றும் அவர்கள் கூறினார்கள். இவற்றை விமானிகள் ஏன் என்ன என்று அறிய முடியாமல் தவறவிட்ட காட்சிகள் என்றும் அவர்கள் விளக்கினர்.

UFO (Representational)

5) சில UAP- அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் எந்த உந்துதலும் இல்லாமல் நகர்வதை அவர்கள் கண்டறிந்தனர்.

6) கடந்த ஆண்டிலிருந்து இத்தகைய யுஎஃப்ஓ குறித்துப் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை தோராயமாக 400 ஆக அதிகரித்துள்ளதாக பென்டகன் அதிகாரி ப்ரே கூறினார். இந்த காட்சிகள் அடிக்கடி மற்றும் தொடர்ந்து காணப்படுவதாகவும், பெரும்பாலும் இராணுவப் பயிற்சிப் பகுதிகளிலோ அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட வான்வெளிகளிலோ காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

7) எனினும் இந்தக் காட்சிகளுக்கும் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

8) இந்த அடையாளம் தெரியாத வான்வழிக் காட்சிகள் அமெரிக்காவிற்கு மட்டும் சொந்தமில்லை என்றும் அவர் கூறினார். பல நாடுகள் UAP நிகழ்வுகள் பற்றிய தங்கள் சொந்த அறிக்கைகள் வைத்துள்ளன. மேலும் சில நாடுகள் அமெரிக்காவுடன் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்றார் அவர்.

9) அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை முதன்மையாக இந்த வான் பொருள்கள் அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தலோடு தொடர்புடையவையா என்பதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக உள்ளன.

10) "அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் ஒரு சாத்தியமான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதனால் அந்த நிகழ்வுகளை பாரதூரமான அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் ," என்று விசாரணையை நடத்தும் குழுவின் தலைவராக இருந்த இந்தியானாவின் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான ஆண்ட்ரே கார்சன் கூறினார்.

இந்த விசாரணை இன்னும் நீடிக்கிறது. இதுவரை ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் அமெரிக்காவில் அதிகம் நடக்கிறது. இது வேற்றுக்கிரக வாசிகளோடு தொடர்புடைவை என்பதற்கு ஆதாரம் இதுவரை கிடைக்க வில்லை என்றாலும் சில காட்சிகள் ஏன் தெரிகின்றன என்பதற்கு இதுவரை விளக்கம் இல்லை. அல்லது அவை பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்ற விசாரனையின் முடிவு எப்படி இருக்குமென பொருத்திருந்து பார்ப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?