Putin

 

Twitter

உலகம்

விளாடிமிர் புதின் : உளவாளி, கொலைகாரர், பெரும் பணக்காரர் - யார் இந்த Putin?

Antony Ajay R

உக்ரைன் நிலை

தற்போது உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பேசும்போது, “போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்; உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ரஷ்ய அதிபரே... மனிதாபிமான அடிப்படையில் உங்களது படைகளைத் திரும்ப பெறுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் பல கட்ட மிரட்டல்களையும், உலக நாடுகளின் கண்டிப்புகளையும் இரைஞ்சல்களையும் இடது கையில் கையாண்டு செய்து போரை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.

உக்ரைன் ஆக்கரமிப்பு நெடுங்காலமாகவே ரஷ்யாவின் கனவாக இருந்து வருகிறது. உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவான கிழக்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் எண்ணத்திலோ அல்லது முழு உக்ரைனையும் ஆக்கிரமித்து பழைய சோவியத்யூனியனை நிறுவும் கனவிலோ புதின் இந்தப் போரை தொடங்கியிருக்கலாம். NATO அமைப்பில் சேராமல் உக்ரைனை தடுப்பதற்காகவும் இருக்கலாம். உண்மை புதினுக்கு தான் தெரியும். நமக்கு புதின் யாரென்று தெரியுமா? புதினை பற்றிய விவரங்களை காணலாம்.உ

Putin

உளவாளி

1991-ம் ஆண்டு சோவியத் வீழ்ந்த போது கோர்பச்சே அரசும் சரிந்தது. அப்போது ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபி-யில் பணியாற்றினார் புதின். அதன் பிறகு நியமிக்கப்பட்ட அதிபர் போரிஸ் யெல்ட்சின் உடன் சமரசமான உறவை பேணுவது அவருக்கு கடினமாக இருந்ததால் யுனிட்டட் ரஷ்யா என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். 2000ம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தார்.

மேற்கத்திய நாடுகள்

ரஷ்யாவின் பாரம்பரியத்தை மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து காப்பவராக தன்னைக்காட்டிக்கொள்கிறார் புதின். மேற்கத்திய நாடுகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு உலக அரங்கில் ரஷ்யாவை நிமிற செய்யும் வல்லமை படைத்தவராக ரஷ்ய மக்கள் புதினை நம்புகின்றனர்.

கம்யூனிச கட்சியில் இருந்து வளர்ந்தவராக இருந்தாலும் பெரும் பணக்கார கூட்டாலிகளின் உதவியுடன் அதிபர் நாற்காலியை எட்டியிருக்கிறார் புதின். அவர் மீது ஊழல் குற்றசாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. எனினும் ரஷ்ய தேசத்தை காப்பவர் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தார்.

Putin

கொலை முயற்சி

2000-ம் ஆண்டு முதல் 2008 வரை ஆட்சியில் இருந்தார். அதற்கு மேல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்க அரசியல் சாசனம் அவரை அனுமதிக்கவில்லை. 2008 முதல் 2012 வரை பிரதமராக இருந்தார் மீண்டும் 2012ல் அதிபரானவர் இப்போது வரை நீடிக்கிறார். இடையில் தேர்ர்தல்களும் நடக்கத்தான் செய்தன.

பெரும் பணக்காரர்

புடினின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர்கள் என்கிறது ஓர் அறிக்கை. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், உலகின் மிகவும் பணக்கார மனிதர்களில் இவரும் ஒருவர்.

2018 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எதிர்கட்சி தலைவரை விமானத்தில் அளிக்கப்பட்ட காபியில் விஷம் வைத்து கொல்ல முயன்றதாக அவர் மீது குற்றசாட்டு உள்ளது. விஷத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளிவந்த உடனே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது வரை சிறையில் இருக்கிறார் ரஷ்ய அரசாங்கத்தால் தீவிரவதி என குற்றம் சாட்டப்பட்டு.

எல்லா சர்வாதிகாரிகளையும் போல அவரும் பிராந்தியங்களின் அதிகாரங்களை சுருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்தால் அவை மேற்கத்திய நாடுகளின் சதி என்றுரைத்தார்.

putin 

நிரந்திர அதிபரா?

2020ம் ஆண்டு தான் 2036 வரை தேர்தல் இல்லாமல் ஆட்சியில் இருக்கப்போவதாக அறிவித்தார். அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

ஜனநாயகமா? ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறை முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் புதின். அவரின் அரசு அனுமதிக்காத செய்திகளை யாரும் வெளியிட முடியாது.

தற்போது உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் புதின் நிச்சயம் உறுதியானதொரு திட்டத்துடன் தான் களமிறங்கியிருப்பார்

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?