Mikaila Ulmer  Twitter
உலகம்

4 வயதில் தோன்றிய யோசனை- எலுமிச்சை பழங்களால் கோடீஸ்வரியான 17 வயது இளம்பெண் - எப்படி?

Priyadharshini R

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதான Mikaila Ulmer என்ற இளம்பெண், 5 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

இவ்வளவு பணமும் எலுமிச்சை பழங்களால் வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மீ அண்ட் தி பீஸ் லெமனேட் என்ற நிறுவனத்தின் தலைவராக Mikaila Ulmer உள்ளார்.

17 வயதில் உல்மர் தொழிலதிபராகக் காரணமே லெமன் தான். தேனுடன், புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து ‘பீ ஸ்வீட் லெமனேட் என்னும் பெயர் கொண்ட இயற்கைப் பானத்தைத் தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறார்.

lemon

அமெரிக்காவில் பல இடங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் ஹோல் புட்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தனது 55 கடைகளில் மிகைலா உல்மர் நிறுவனம் தயாரிக்கும் பானத்தை விற்பனை செய்து வருகிறது.

அதற்காக, மிகைலா உல்மருடன் ரூ. 70 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.

மிகைலா உல்மருக்கு இந்த வியாபாரத்துக்கான யோசனை 4 வயதாக இருக்கும் போது வந்திருக்கிறது. பின்னர் அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் அது குறித்து படிக்க தொடங்கியுள்ளார்.

அதன் பின்னர் பீ ஸ்வீட் லெமனேட் பானம் தயாரிக்கும் தொழிலைக் கடந்த 2009-ல் தொடங்கினார்.

தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேனீக்களைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டு வரும் உல்மர், தேனீக்களைக் காப்பதே தன் மிகப்பெரிய குறிக்கோள் என்கிறார்.

இதன்போது உல்மர் தனது முயற்சியைத் தொடங்கியதிலிருந்து தேனீக்களைக் காப்பாற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு லாபத்தில் 10% நன்கொடையாக அளித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?