துருக்கி நிலநடுக்கம்: ”இயற்கை அலாரம்” சிலிர்க்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ
துருக்கி நிலநடுக்கம்: ”இயற்கை அலாரம்” சிலிர்க்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ  twitter
உலகம்

துருக்கி நிலநடுக்கம்: ”இயற்கை அலாரம்” சிலிர்க்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ

Keerthanaa R

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் பறவைகளிடம் விநோதமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது.

பறவைகள் கூச்சலிட்டுக்கொண்டு அங்குமிங்குமாக பறக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இதனை இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்

ஏதாவது ஒரு இயற்கை பேரிடர் நிகழப்போகிறது என்றால், மனிதர்கள், தொழில்நுட்பங்களுக்கு முன்னதாக அதனை அறிவது விலங்குகளும் பறவைகளும் தான்.

2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு முன் விலங்குகள் சில தப்பிக்க முயற்சித்ததும், சுமத்திரா நிலநடுக்கத்திற்கு முன் யானைகள் நடவடிக்கை ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு சான்று.

நேற்று காலை துருக்கி, அதனை தொடர்ந்து சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4000த்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அடுத்தடுத்து பூகம்பங்கள் ஏற்பட்டு வருவதால் மீட்பு பணிகள் தடைப்பட்டு வருகிறது.

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் பறவைகள் அசாதாரணமாக நடந்துகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ”இயற்கையின் எச்சரிக்கை அமைப்பு. அதைக் கேட்கும் அளவுக்கு நாம் இயற்கையோடு இணங்கவில்லை.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

துருக்கு மற்றும் சிரியாவுக்கு உலகநாடுகள் அனைத்தும் உதவ முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?