Anand Mahindra: அம்பானி, சுனிதா வில்லியம்ஸுடன் Selfie எடுத்த தொழிலதிபர் - வைரல் புகைப்படம்
Anand Mahindra: அம்பானி, சுனிதா வில்லியம்ஸுடன் Selfie எடுத்த தொழிலதிபர் - வைரல் புகைப்படம் ட்விட்டர்
உலகம்

Anand Mahindra: அம்பானி, சுனிதா வில்லியம்ஸுடன் Selfie எடுத்த தொழிலதிபர் - வைரல் புகைப்படம்

Keerthanaa R

இந்தியாவின் பெரும்புள்ளிகளான ஆனந்த் மஹிந்திராவும், அம்பானியும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. ஊபர் வாடகைக் காருக்காக காத்திருந்த சமயத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது

என்ன இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வாடகை காரில் சென்றனரா?

ஆனால் அப்போது தான் இந்த மில்லியன் டாலர் தருணம்

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு இந்திய பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டின்னர் பார்ட்டி கொடுத்தார்

இதில் பங்கேற்க தான் இருவரும் சென்றுள்ளனர். இவர்களை தவிர சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா இந்திரா நூயீ உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆனந்த் மஹிந்திரா இந்த 2 கே கிட்ஸை விட அதிகமாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர் என்பது நாம் அறிந்த விஷயம் தானே? தன் ட்விட்டர் பக்கத்தில் நடப்பவற்றை அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டிருந்தார்.

அதில் ஒரு புகைப்படம் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அது இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமாகும். அந்த ஃபோட்டோவில் ஆனந்த் மஹிந்திரா, முகேஷ் அம்பானி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வ்ருந்தா கபூர் ஆகியோர் இருந்தனர்.

அந்த பதிவில், "இதைத்தான் ‘வாஷிங்டன் தருணம்’ என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன். நேற்றைய தொழில்நுட்ப சந்திப்புக்குப் பிறகு, முகேஷ் அம்பானி, வ்ருந்தா கபூர் & நானும் வர்த்தகச் செயலாளருடன் உரையாடலைத் தொடர்ந்தோம், அடுத்த மதிய உணவு நிகழ்ச்சிக்கு கூட்டிச் செல்லும் குழு ஷட்டில் பேருந்தைத் தவறவிட்டோம்.

அப்போது ஊபர் கார் பெற முயற்சித்துக்கொண்டிருக்கும்போது நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸை சந்திக்க நேர்ந்தது.

அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நாங்கள், ஊபருக்கு பதிலாக அவரது விண்கலத்தில் சவாரி செய்ய முடியுமா என்றும் கேட்டோம்…" என்று அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் பகிர்ந்திருந்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க சுனிதா வில்லியம்ஸும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?