yoga canva
உலகம்

விண்வெளியில் யோகாசனம் செய்யும் Astronaut - வியப்பில் இணையவாசிகள் | Video

விண்வெளியில் யோகாசனம் செய்யும் வீராங்கனை சமந்தாவின் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Keerthanaa R

நம் உடல் நலத்தை ஆரோக்கியமாக பாதுகாத்துகொள்ள பரவலாக எல்லோரும் கடைப்பிடிக்க சொல்லும் விஷயம் யோகாசனம். 

இந்தியா மட்டுமல்லாமல், மேலை நாடுகளிலும் யோகா உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆஸ்டிரானாட் சமந்தா விண்வெளியில் யோகாசனம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 

Samantha performs yoga in space shuttle

சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறார் சமந்தா கிறிஸ்டோஃபெரெட்டி. விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால், தன்னை சமநிலையில் வைத்துகொள்ள அவர் எலாஸ்டிக் பட்டைகள் (மீள் பட்டைகள்) அணிந்திருந்தார். அவற்றை அணிந்து கழுகு போஸ் ஒன்றையும் செய்கிறார். 

காஸ்மிக் கிட்ஸ் என்கிற சேனலின் இன்ஸ்டிரக்டரின் உதவியோடு விண்வெளியில் யோகா செய்திருக்கிறார் சமந்தா. 

"இது கொஞ்சம் தந்திரமானது தான். ஆனால் இங்கு யோகா செய்வது சாத்தியமே" என்று கிரிஸ்டோபோரெட்டி அந்த ட்வீட்டில் எழுதினார். மேலும் அவர் காஸ்மிக் கிட்ஸ் பயிற்சியாளருக்கும் அந்த ட்வீட்டில் நன்றி தெரிவித்திருந்தார். 

கடந்த 27 ஆம் தேதி இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. பூமியை கடந்து, விண்வெளியிலும் யோகா செய்ய முடியும் என சமந்தா காண்பித்திருப்பது, அதை புதியதொரு உயரத்திற்கு எடுத்து சென்றுள்ளது என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமந்தாவின் முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?