இறந்த தங்களது வளர்ப்பு நாயை வீட்டில் பயன்படுத்தும் மிதியடியாக மாற்றியுள்ளது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று.
செல்ல பிராணிகள் மனிதர்களின் வாழ்வில் சந்தோஷத்தின் சாவியாக இருக்கிறது. அவற்றை வளர்ப்பவர்கள் குடும்பத்தில் வாழ்பவர்களுக்கு இணையாக அதற்கு அன்பும் அரவணைப்பும் தருவார்கள். அதில் அதிகம் விரும்பப்படும் பிராணியாக இருப்பது நாய்கள் தான்.
மனிதர்களுக்கு இறப்பு என்ற ஒன்று இருப்பது போல நம் செல்ல பிராணிகளுக்கும் மரணம் இருக்கிறது. அப்படி அவை இறந்த பின்னர், அவற்றின் ஞாபகமாக அதன் உரிமையாளர்கள் பல பொருட்களைச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.
ஆனால் ஆஸ்திரேலியாவில், இறந்த தங்களது நாயை, நாம் வீட்டில் கால் துடைக்க பயன்படுத்தும் மிதியடி போல மாற்றியுள்ளனர் ஒரு குடும்பத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் அந்த நாயின் உரிமையாளர்களோ, தங்களை விட்டு பிரிந்த அவர்களது நண்பன், இப்படி அவர்களுடன் எப்போதும் இருப்பான் என நெகிழ்ச்சியாக சொல்கின்றனர்.
இந்த குடும்பத்தினருக்கு உதவியது சிமெரா டாக்சிடெர்மி என்ற நிறுவனம்
இப்படி இறந்த தங்களது செல்ல பிராணியின் உடலை பாதுகாத்து வைப்பதற்கு பெட் டாக்சிடெர்மி என்று பெயர். இது உலகளவில் அதிகம் அறியப்படாத விஷயமாக இருப்பதால் தான் மக்களுக்கு இதை பார்த்தவுடன் சற்று அருவருப்பும், சங்கடமும் ஏற்படுகிறது என்கின்றனர் சிமெரா டாக்சிடெர்மியின் உரிமையாளர்கள்.
"பலருக்கு தங்கள் செல்ல பிராணிகளை இப்படி ரக் ஆக மாற்றிக்கொள்வது சென்டிமென்ட்டாக உள்ளது. அவர்களால் தங்கள் வளர்ப்பு பிராணிகளின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் பெட் டாக்சிடெர்மியை நாடுகின்றனர். ஆனால் இதை வெறும் வீட்டு அலங்கார பொருளாக மட்டும் பார்க்கும் மக்களும் இருக்கின்றனர்"
ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்தாரால் வளர்க்கப்பட்ட கோல்டன் ரிட்ரீவர் நாயை ரக் (கம்பளி/மிதியடி) ஆக மாற்றியுள்ளனர். அதை ரீல்ஸ் ஆக எடுத்து சிமெரா டாக்சிடெர்மி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
சிலர் இந்த முறையை ஏற்றாலும், பலரும் இதை கண்டந்த்திற்குரிய செயல் எனக் கூறியுள்ளனர். மேலும் இது மிருகங்களை வதைக்கும் செயல் எனவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust