Ayla Summer
Ayla Summer Instagram
உலகம்

நிரந்தர புன்னகையுடன் பிறந்த குழந்தை - இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

Keerthanaa R

புன்னகை என்பது ஒரு மனிதன் அணியும் மிக அழகான, விலையற்ற அணிகலனாக கருதப்படுகிறது. எந்த ஒரு அசவுகரியமான சூழ்நிலையிலும், அடுத்தவரைப் பார்த்து சிந்தும் சிறிய புன்னகையில், நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆனால் அதே புன்னகை ஒரு குறைபாடாக இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா?


ஆஸ்திரேலியாவில் பிறந்துள்ள இந்த குழந்தைக்கு முகத்தில் நிரந்தர புன்னகை இருக்கிறது. அயலா சம்மர் என்ற இந்த பெண் குழந்தை முகத்தில் வாய் பகுதியில் உள்ள தசைகள் சரியாக ஒட்டாமல் இருப்பதால், எப்போதும் சிரித்துக்கொண்டு இருப்பது போல காட்சியளிக்குமாம். பைலேடரல் மைக்ரோஸ்டோமியா என்ற பிறவி முரண்பாடு காரணமாக இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Ayla Summer

உலகில் இந்த அரிய வகை குறைபாட்டால் மொத்தம் 14 பேர் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஆஸ்திரேலிய மருத்துவர்கள் கண்ட முதல் கேஸ் என குறிப்பிட்டுள்ளனர். இந்த குழந்தையின் தாய் கருவுற்ற போதே இந்த குறைபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மிக அரிதான குறைபாட்டால், அந்த குழந்தை பேசுவதில், முக அழகியலில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தன் குழந்தையின் இந்த நிலையைக் கண்டு சற்றும் மனம் உடையாமல், புகைப்படங்கள் எடுத்து தன் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்த தாய் கிறிஸ்டினா, "My Darling Lala. Better late then never. Running 2 days behind at all times… Almost out of her premmie suits" என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் தான் இப்போது இணையதளத்தில் வைரல். இதை 'நிரந்தர புன்னகை' என்று வெகுவாக கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?